மோசே Houston, Texas, USA 50-0110 1இன்றிரவு மீண்டும் இங்கே ஹூஸ்டனில் இருப்பது எனக்கு ஒரு மகத்தான சிலாக்கியமாக உள்ளது. நான் உங்களை சந்தித்தது முதற்கொண்டு இதுவரை சிறிது காலம் ஆகி விட்டது, அங்கே அநேக மகத்தான வெற்றிகள் உண்டாயிருந்தது, அநேக துயரங்களும் கடந்து சென்றது. இருந்த போதிலும், நான் இன்னுமாக தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருப்பதற்காக இன்றிரவில் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீண்ட கால அளவில் நடைபெறும் என்னுடைய கூட்டங்களில் ஒன்றில் ஊழியம் செய்யும்படி இன்றிரவு மீண்டுமாக இங்கே ஹூஸ்டனில் இருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நாங்கள் இந்த முறை ஹூஸ்டனில் இருக்கும்படியாக தொடர்ந்து ஏழு இரவுகளைக் கொண்டிருக்கிறோம். நம்முடைய கூட்டங்கள் மேலான தரத்தோடு நடைபெறத் (துவங்கினது) முதற்கொண்டு இதுவரை நான் நடத்தின கூட்டங்களிலேயே இதுதான் நீண்ட காலமாக நடைபெறும்கூட்டமாகும். இது ஒரு மகத்தான கூட்டம் என்று நிரூபிக்கப்படும் என்று நான் தேவனையே நம்பியிருக்கிறேன். இந்தக் காலக் கட்டத்தில் உபத்திரவப்படுகிற ஜனங்களில் அநேகரும், வியாதியஸ்தரும், துன்பப்படுகிறவர்களும் விடுவிக்கப்படுவார்கள். மேலும் அதோடு கூட இக்காலக்கட்டத்தில் கிறிஸ்துவுக்கு (முன்பாக) கீழப்படியாதவர்களாகவும், அலட்சிய போக்குடனும் இருக்கிற அநேகர் அவரை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்து கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன். செய்யப்பட்ட அல்லது சொல்லப்பட்ட காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் தேவனே முற்றிலுமாக மகிமையைப் பெற்றுக் கொள்வாராக. 22.இந்தக் கூட்டமானது இப்போதுதான் துவங்குகிற நேரத்தில், இன்றிரவில் நீங்கள் எல்லாரும்... விரும்புகிறேன். இது மிக மோசமான ஒரு இரவாக உள்ளது, வெறுமனே ஒருசில ஜனங்கள் தான் உள்ளே இருக்கிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் விரும்புகிறபடி, இந்தக் கூட்டங்கள் நடக்கும் போது, நான் ஜனங்களை சந்திக்கப் போவதில்லை, ஏனென்றால் நான் எனது நேரத்தை ஜெபத்தில் செலவழிக்கிறேன். நான் தொடங்கவிருக்கிற சுகமளிக்கிற ஆராதனை போன்ற இந்த காரியங்களுக்காக நிச்சயமாக ஆயத்தமாக வேண்டும். நான் உதவி செய்யவே இங்கு வந்திருக்கிறேன். நான் நிச்சயமாகவே... எனக்கு ஒத்தாசை பரத்திலிருந்து தான் வருகிறது, நான் வேறு யாரோ ஒருவருக்கு உதவி செய்யும்படி எதிர்பார்ப்பேன் என்றால், நான் - நான் எப்போதுமே தேவனோடுள்ள தொடர்பில் தரித்திருந்தாக வேண்டும். மேலும் நான் ஒவ்வொரு நபரையும் அழைத்துச் சென்று, உங்கள் ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட முறையில் நன்றாக பேச தான் விரும்புகிறேன், அது பெரும்பாலும் இந்த பூமியில் கூடாத காரியமாக உள்ளது. 33.ஆனால் அங்கே வேறொரு நேரம் வருகிறது, அப்போது நாம் ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவு செய்ய நமக்கு முழு நேரமும் இருக்கும் என்று நம்புகிறேன், நாம் ஒரு மேலான தேசத்தில் நேரத்தை செலவழிக்கவே வாஞ்சிக்கிறோம், அங்கே வியாதியஸ்தருக்காகவும், அவதிப்படுபவர்களுக்காகவும் ஜெபம் பண்ண ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்காது. அங்கே அவை எதுவுமே இருக்காது. நாம் இயேசுவின் அருகிலேயே (door neighbors) வாழ்ந்து கொண்டிருப்போம். அங்கே அதற்கு மேலும் வியாதியோ துன்பமோ இருக்காது. தேவனே, இந்தத் தொல்லைகள் எல்லாம் முடிவு பெறும் அந்த நாள் சீக்கிரத்தில் வரட்டும். அப்போது நாம் அவரை முகமுகமாய் பார்த்து நாம் அறியப்பட்டிருக்கிற படியே அறிந்து கொள்வோம். அதற்காகத்தான் நாம் போராடுகிறோம். இன்றிரவில் அதற்காகத் தான் நான், அதை எனது வீடாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்கும்படியாக கடுமையாகப் போராடுகிறேன். என்னால் எத்தனை பேரை என்னோடு கூட கொண்டு வர முடியும் என்று பார்க்கவே நான் விரும்புகிறேன். அது அவ்வளவு உண்மையானது... நாம் இன்றிரவு இங்கே இருப்பதைக் காட்டிலும் அது அதிக உண்மையானது. 44.இங்கே கூட்டங்கள் குறிப்பிடத்தக்க ஒரு சில இரவுகளுக்கு தொடர்ந்து நடக்கும். அதன்பிறகு நமக்கு இரண்டு காலியான இடங்கள் உள்ளன, நாம் இரண்டு இரவுகளுக்கு வேறு ஏதோவொரு அரங்கத்தை ஒழுங்கு பண்ண முயற்சிப்போம். அதன்பிறகு நாம் பொது விளையாட்டுக்கள் நடக்கும் அரங்குக்குப் போகிறோம். நாம் ஒரு மகத்தான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் வியாதியோடும் துன்பத்தோடும் இருக்கிற உங்களுடையவர்களை அழைத்து வாருங்கள். பாவிகளையும் அழைத்து வாருங்கள். அநேக நேரங்களில் அற்புதங்கள் நடக்கும்போது, அல்லது, ஏதோவொன்று செய்யப்படும் போது, அது ஜனங்களுடைய இருதயங்களையும், கிறிஸ்துவைப் பொறுத்த அவர்களுடைய மனப்பான்மையையும் மாற்றி விடுகிறது. இங்கே சமீபத்தில் எனக்கு ஒரு கூட்டம் இருந்தது, நான் எப்போதும் கொண்டிருந்ததிலேயே ஒரே நேரத்தில் ஏராளமானோர் மனந்திரும்பிய, பீட அழைப்புகளில் ஒன்று எனக்கிருந்தது... ஒரே நேரத்தில் 2000 பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். இரண்டாயிரம் ஜனங்கள் கிறிஸ்துவிடம் வந்தனர். நான் வேறொரு தேசத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பேன் என்று நம்புகிறேன். 55.இப்பொழுது, நீங்கள் கூட்டங்களில், சுகம் பெறுவது என்பது, நாம் அதை மேடையில் கொண்டிருக்கிறோம். மேலும்... எனவே ஒருவரை அழைத்து வாருங்கள், விசேஷமாக வியாதிப்பட்டுள்ள ஜனங்களாகிய நீங்கள் (ஜெப) வரிசையில் வாருங்கள், அவர் உன்னதத்திற்கு ஏறிச் சென்றார் என்ற அந்தச் சிறிய துண்டுப்பிரசுரத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களிடத்தில் 5 சென்ட் காசுகள் இல்லை என்றால், எப்படியும் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எனவே நாங்கள் இங்கே பணத்திற்காக இருக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு உதவி செய்யும்படியாகவே இங்கே இருக்கிறோம். அதுதான் எங்களுடைய இருயதயத்தின் (வாஞ்சையாகும்.). நாங்கள் உங்களுக்கு உதவி செய்யவே இங்கிருக்கிறோம். இப்பொழுது, சத்தியம் என்று நான் அறிந்துள்ளதை மாத்திரமே என்னால் பேச முடியும். இப்பொழுது, நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறினால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டும். நான் நானாகவே பேசி, தேவன் செய்திருக்கிற எதையாகிலும் கூறி, தேவன் அதற்குப் பின்பாக இருந்து பேசவில்லை என்றால், அது தவறாய் உள்ளது. ஆனால் தேவன் செய்திருக்கிற எதையாகிலும் நான் உங்களிடம் கூறி, தேவன் இறங்கி வந்து, அதே காரியத்தை நிரூபிப்பாரென்றால், நீங்கள் தேவனை விசுவாசித்தாக வேண்டும். அது சரி அல்லவா? 66.இப்பொழுது, இன்றிரவு நான் உங்களிடம் என்ன கூறுகிறேனோ, நான் உங்களிடம் கூறினதை நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன்பிறகு, அந்தக் காரியங்கள் அவைகள் சம்பவிக்குமென்று நான் கூறினவிதமாக சம்பவிக்கவில்லை என்றால், ஆராதனை முடிந்த பிறகு, இந்த 17 நாட்களுக்கு முடிவில், நீங்கள் பட்டணத்தில் இங்கும் அங்கும் சென்று, 'சகோதரன் பிரன்ஹாம் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி' என்று கூறலாம். ஆனால் நான் கூறுவது சத்தியம் என்று தேவன் ஆதரித்து மிகச் சரியாக நிரூபிப்பாரென்றால், நல்லது அப்போது, நீங்கள் என்னை விசுவாசிக்கா விட்டால், தேவனை விசுவாசியுங்கள். அது சரியல்லவா? அப்படியானால் நீங்கள் இங்கும் அங்கும் சென்று, 'கர்த்தர் சரியாக இருக்கிறார், கர்த்தர் எங்களிடம் சத்தியத்தையே கூறியிருக்கிறார்' என்றும் கூற முடியும். அவர் தான் எங்களை அனுப்பினார். 77.இப்பொழுது... அந்த அளவுக்கு. அங்கே ஒரு சுகமளிக்கும் வரம் உள்ளது... வரங்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்று அநேக ஜனங்கள் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் உங்களை சுகமாக்க முடியாது. நீங்கள் எவ்வளவு வரத்தை உடையவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, கொடுக்கிறவர் (Giver) கிறிஸ்துவே. புரிகிறதா? நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே சுகமாகிறீர்கள். இப்பொழுது ஒரு சிறு வேதவாக்கியத்தை வாசித்து, அந்த வரத்தினுடைய செயல்பாடுகளில் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். அப்போது எப்படி வருவது என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அப்போது நீங்கள்... நாம் என்ன செய்யலாம் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று எவ்வாறு விரும்புகிறீர்கள், நாமெல்லாருமே இதை விரும்புகிறோமா? நீங்கள் ஒருக்கால் அநேகமாக 1800 அல்லது 2000 ஜனங்களை போன்றுள்ள, அதைப் போன்ற ஏதோவொன்றை... இங்கேயுள்ள இந்தச் சிறு கூட்டத்தை எடுத்து, உங்களால் கூடுமானால் - இன்றிரவு இங்கேயுள்ள இச்சிறு கூட்டத்தை எடுக்க முடிந்து, இவர்களை அமர வைத்து, இவர்கள் ஒவ்வொருவரும், சத்தியம் என்று நான் உங்களிடம் கூறியிருக்கிற காரியங்களை மிகச்சரியாக விசுவாசிக்கும்படி செய்தால், ஹூஸ்டனை அசைக்கும் ஒரு கூட்டம் அங்கேயிருக்கும். அது சரியே. அவர் அசைப்பார். 88.இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். உங்களால் அதை எண்ணிப் பார்க்க முடிந்தால், இந்தக் கூட்டத்தில் உள்ள உங்களில் சிலருக்கு ஒருக்கால் இது புரியாமல் இருக்கலாம். நண்பர்களே, வெளிப்படையாகக் கூறினால், எனக்குப் புரியாத அதைக் குறித்த அநேக காரியங்கள் உள்ளன. நான் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளுகிறேன். தேவனை ஒருபோதும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம்; உங்களால் அதைச் செய்ய முடியாது. தேவன் அறிவின் மூலம் புரிந்து கொள்ளப்படுபவரல்ல; தேவன் விசுவாசத்தின் மூலமே புரிந்து கொள்ளப்படுகிறார். அது சரியா? தண்ணீர் எவ்வளவு ஆழமாக இருக்குமோ என்றும், அந்தத் தண்ணீரின் மேல் நடப்பதென்பது அவனுக்கு எவ்வளவு முடியாத காரியம் என்றும் பேதுரு புரிந்து கொள்ள முயற்சித்திருந்தால், என்னவாகியிருக்கும்; அவன் (தண்ணீரின் மேல்) ஒருபோதும் நடந்திருக்கவே மாட்டான். பாருங்கள்? ஆனால் அவன் கிறிஸ்துவை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு அதன்மேல் நடந்து சென்றான். நல்லது, அந்தவிதமாகத்தான் நானும் இதைச் செய்தேன். நான் அவரை அப்படியே அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு, அங்கே நான் சென்றேன். நீங்களும் இன்றிரவு அவரை அப்படியே அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருக்கால் ஒரு பாவியாக இருந்து, தேவனை அவருடைய வார்த்தையில் எடுப்பது எப்படி என்று புரியாமல் இருந்தால், அப்படியானால் தேவன் இங்கே என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் அதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அது சம்பவிக்கவிலையா என்று பார்க்கும்படி நான் விரும்புகிறேன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். 99.இப்பொழுது, நாம் நம்முடைய சிருஷ்டிகரிடம் பேசுகையில், சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமா? எங்கள் பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்... எங்களுடைய... எங்களுடைய இரட்சிப்பில் களிகூரும்படியாக எங்கள் இருதயங்கள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன, ஏனென்றால் மீட்பராகிய அந்த இயேசுவானவர் வந்து எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் மேசியாவாக பூமிக்கு வந்து, பாவ மாம்ச சரீரமான விதமாக ஆகி, எங்கள் வியாதிகளையும், எங்கள் அக்கிரமங்களையும் தம்மேல் ஏற்றுக் கொண்டார்; அவர்-அவர்-கல்வாரி சிலுவைக்கு அவைகளை சுமந்து வந்து, அதன்பிறகு உன்னதத்திற்கு ஏறி, இன்றிரவில் மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து, பரிந்து பேசி, எங்களுடைய பிரதான ஆசாரியர் ஆனார், அவர் எங்களுடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். இன்றிரவு, இந்த எல்லா நூறு ஆண்டுகளும் கடந்த பிற்பாடு, இஸம்கள் எழும்பி, மதவெறித்தனங்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன, அப்படியிருப்பினும் தேவ குமாரனுடைய மகிமையான வல்லமையானது இன்னுமாக அவருடைய ஆயிரக்கணக்கான ஜனங்களுடைய இருதயங்களில் ஆளுகை செய்து, ஆட்சி செலுத்துகிறது. இப்பொழுதும், நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, நாங்கள் இந்த மகத்தான எழுப்புதலுக்குள் பிரவேசிக்கையில், இப்பொழுது அதனுடைய ஆரம்பமாக இங்கே ஹூஸ்டனில் தேவனுடைய மகிமையானது எங்கள் மத்தியில் இறங்கி வரும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். முடமாகிப் போன ஒவ்வொருவரும், குருடரும், உபத்திரவப்படுகிறவர்களும், வளைந்த உறுப்புகளைக் கொண்டவர்களும் (twisted), வலிப்பு நோயாளிகளும், மனநிலை குறைபாடு உள்ளவர்களும், எல்லா விதமான வியாதிகளும் இங்கே சுகமடைவதாக. ஆயிரக்கணக்கான ஜனங்கள் பீடத்தைச் சுற்றிலும் கூட்டமாக வந்து, தங்கள் இருதயங்களை உமக்குக் கொடுத்து, பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவாராக. அது அப்படியே... கர்த்தாவே, ஒருக்கால் பதினேழு நாட்கள் அதை ஆரம்பிக்கவும் கூட செய்யாமல் இருக்கலாம். அது தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து, உம்முடைய நேச குமாரன் மகிமையில் தோன்றுவது மட்டுமாக நடைபெறுவதாக, அவரைக் கவனிக்கும்படியாக, நாங்களும் அவரோடு தோன்றி, அவருடைய நீதியை வஸ்திரமாக உடுத்திக் கொள்வோமாக. 1010.பிதாவே, எங்களை ஆசீர்வதியும். இப்பொழுது, உம்முடைய தாழ்மையான ஏழை ஊழியக்காரன், இந்த மகத்தான அறிவிப்புகளை கொடுக்கும்படியாக, அல்லது, நீர் செய்திருக்கிற இந்த மகத்தான காரியத்தை வெளிப்படையாக தெரியப்படுத்தும்படியாக இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கையில்... இங்கே கவனித்துக் கேட்பவர்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தைக் கொண்டிருப்பார்களாக. கர்த்தாவே, இந்தக் காரியங்களை நடப்பித்த உம்முடைய ஆவியானவர் இன்றிரவு இந்தக் கூட்டத்தில் நின்று, கூறப்பட்ட யாவற்றையும் உண்மை என உறுதி செய்வாராக. தொடர்ச்சியாக ஒவ்வொரு இரவும்... இந்தப் பட்டணத்தையும் ஒவ்வொரு சபையையும் அசைக்கிற ஒரு பழமை நாகரீகமான எழுப்புதல் இங்கே இருப்பதாக. ஆயிரக்கணக்கானவர்கள் இராஜ்யத்திற்குள் பிறப்பார்களாக. இதை அருளும், பிதாவே, அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய மகிமைக்காக நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 1111.யாத்திராகமம் 23ம் அதிகாரத்தில், நான் வழக்கமாக எழுப்புதலின் ஆரம்பத்தில் வாசிக்கிற மிகவும் நன்கு தெரிந்த வசனம், ஏனென்றால் இது... இது... தேவன் இன்று இடைபட்டுக் கொண்டிருக்கும் விதத்தோடு இடைபடுகிற ஏதோவொன்றாக உள்ளது, தேவன் தமது ஊழியக்காரனாகிய மோசேயுடன் பேசி அவனை அனுப்புகிறார். நீங்கள் அதை எழுதிக் கொள்கிறீர்களானால், அது 23ம் அதிகாரம் 20ம் வசனத்தில் உள்ளது, 23ம் வசனத்தின் ஒரு பாகம் வரை வாசிப்போம். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்கு முன்சென்று,... 1212.இங்கே தேவன் தமது ஊழியக்காரனாகிய மோசேயிடம் பேசிக் கொண்டிருக்கிறார்... அது இஸ்ரவேல் புத்திரர்கள் தேவனை விட்டும், அவருடைய கட்டளைகளை விட்டும், மற்றவைகளை விட்டும் அகன்று போய்... ஆகிப்போய் விட்ட ஒரு நேரமாக இருந்தது, அப்போது அவர்கள் தொல்லைக்குள்ளாகி, எகிப்திய அடிமைத்தனத்திற்குட்பட்டு எகிப்தில் இருந்தார்கள். அங்கே (அவர்களுக்கு) மிகப்பெரிய தேவை உண்டானது. அவர்கள் துணிகரமாக போய், அவர்களுக்கு தேவைகள் எதுவும் இல்லாதிருந்த காலம் வரையில், ஏன், அவர்கள் தொடர்ந்து சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தனர். ஆனால் ஆபிரகாமுடைய சந்ததியார் ஒரு அந்நிய தேசத்தில் 400 ஆண்டுகள் பரதேசிகளாய் இருப்பார்கள் என்றும், அதன்பிறகு அவர் பலத்த கரத்தினால் அவர்களை வெளியே கொண்டு வருவார் என்றும் தேவன் ஆபி - ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணின பிற்பாடு, தேவனுடைய தீர்க்கதரிசன வேளையானது வந்த போது... அதன்பிறகு அந்த வாக்குத்தத்தம் (நிறைவேறும்) நேரத்தின் வேளையானது சமீபித்த போது, யோசேப்பை அறிந்திராத ஒரு பார்வோன் அங்கே எழும்பினான். அது சம்பவிக்காது என்றும் அது கூடாத காரியம் என்றும் எவ்வளவு தான் தோன்றினாலும் அது காரியமில்லை, வாக்குத்தத்தம் (நிறைவேறும்) வேளை நெருங்கும் போது, தேவன் தமது தீர்க்கதரிசன வாக்குத்தத்தத்திற்கு ஏற்றபடி காரியங்களை குவியலாக சேர்த்து விடுவார் (heap up). நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் எப்போதுமே அதைச் செய்கிறார். அவர் எப்போதுமே... அது எப்போதுமே அந்தவிதமாகத்தான் இருக்கிறது. 1313.யார் நினைத்திருப்பார்கள், அந்த ஜனங்கள், அவர்கள் எப்படியாக மதிக்கப்பட்டனர், அங்கே இருந்து, அந்த சொப்பனத்தைக் கூறி, எகிப்து தேசத்தை நீண்ட காலமாக இரட்சித்த அந்த வாலிப ஆட்சியாளனாகிய யோசேப்பினிமித்தமாக அவர்கள் ஏறக்குறைய தொழுது கொள்ளப்பட்டனர். ஒரு கால இடைவெளியில், 400 வருடங்கள் போன்ற குறுகிய கால இடைவெளியில், அவர்கள் அவனை மறந்தே போய் விட்டனர், ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம் சமீபமான போது, அங்கே யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் எழும்பி, ஆளோட்டிகளையும் மற்றவர்களையும் அந்த ஜனங்கள் மேல் ஏற்படுத்தக் காரணமானான். அப்போது அவர்கள் சுமை சுமக்கத் துவங்கி, ஆளோட்டிகளினிமித்தமாக தேவனை நோக்கி கூக்குரலிட்டார்கள். அப்போது இந்நேரத்தில், அவர்கள் கூக்குரலிடத் துவங்கின பிறகு, நல்லது, தேவன் சம்பவிக்கும்படியாக ஒரு விசித்திரமாக காரியத்தை வைத்திருந்தார். 1414.இப்பொழுது, இது என்னுடைய தாழ்மையான விசுவாசமாகும், வரங்களானது கரங்களைக் கொண்டு கொடுக்கப்படுவதல்ல. வரங்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவையாகும். 'வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றியே கொடுக்கப்படுகின்றன.' நீங்கள் காரியங்களைக் கூறி, இந்தக் காரியங்களை சரியான விதமாக செயல்பட வைக்க முயற்சிசெய்து, சரியானதை விசுவாசித்து, சரியானதைக் கிரியை செய்ய வைக்கலாம்; ஆனால் தேவன் தாமே அதற்குப் பின்பாக இல்லாவிட்டால், அவைகள் ஒன்றுமேயில்லை. அது நீங்கள் பெருமையடித்துக் கொள்ள முயற்சிக்கும் எதுவுமல்ல. உங்களால் சாத்தானை ஏமாற்ற முடியாது. அவன் ஏமாறுவதில்லை. நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது உண்மை. 'வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றியே கொடுக்கப்படுகின்றன.' அவர்கள் உலகத்திற்குள் பிறக்கிறார்கள். தேவன் காரியங்களை முன்னரே கண்டு, என்ன சம்பவிக்கப் போகிறது என்ற தம்முடைய தீர்க்கதரிசனத்தை அறிகிறார். அவர் அங்கே அதை எதிர்கொள்ளும்படியாக இங்கே ஏதோவொன்றைத் துவங்குகிறார். ஜனங்களுக்கு இது தேவையாயிருக்கப் போகிற வேளையை அவர் கண்ட போது, ஒரு விசித்திரமானதும், வினோதமானதுமான பிறப்பை கொண்டு பிறந்த மோசே என்ற பெயருடைய ஒரு சிறு பையனை அவர் கொண்டிருந்தார். பார்வோனுடைய குமாரத்தியைக் கொண்டு அவனுக்கு மோசே என்று பெயரிடப்பட்டது, ஏனென்றால் நீங்கள் உங்கள் வேதாகமத்தையும், அதைக் குறித்த ஞாயிறு பள்ளிக் கதையையும் அறிந்திருப்பீர்களானால், அவன் ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவனாயிருந்தான். 1515.அதன்பிறகு அவனுக்கு 40 வயது ஆன போது, தேவன் தம்முடைய நோக்கத்திற்காக அவனை அழைத்தார். அவன் எதற்காக அனுப்பப்பட்டான் என்பதை அந்த இஸ்ரவேல் ஜனங்கள், நிச்சயமாகவே, புரிந்து கொள்வார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் அந்த ஜனங்கள் மோசேயைத் தவறாகப் புரிந்து கொண்டனர். இப்பொழுது, இதை மிகவும் கவனத்துடன் மறந்து போகாமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நண்பர்களே. தேவன் தமது ஜனங்களோடு எப்பொழுதாகிலும் இடைபட வேண்டியதாயிருந்த கடினமான காரியம் என்னவென்றால், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் நம்பும்படி செய்ய வைப்பது தான். தேவன் எப்பொழுதாகிலும் செய்தவைகளிலேயே கடினமான காரியம் யாதெனில், ஒரு மனிதனை நம்பும்படி வைப்பது தான்... நல்லது, அவர்கள் இயேசுவை ...குமாரன் என்று விசுவாசித்தனர். அவர் தேவ குமாரன் என்று அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவர்கள் தேவனை விசுவாசித்தனர். ஆனால் அவர் ஒரு மனிதனாக இருந்து கொண்டு, தம்மைத்தாமே தேவனோடு சமமாக்கிக் கொள்கிறார் என்று அவர் கூறினார். படிப்பறிவு இல்லாத ஒரு ஏழையான அவர் எப்படி முடியும், அவர் எப்படி இருக்க முடியும்? முன்னணையில் பிறந்து, ஒரு ஏழை குடும்பத்திலிருந்து வளர்ந்து, அவருக்கிருந்தது போன்ற பின்னணியை உடையவராகிய ஒரு மனிதர், ஒரே வஸ்திரத்தை உடுத்தி, தம்முடைய தலை சாய்க்க கூட ஒரு இடம் இல்லாத அவ்விதமாக ஜீவித்த ஒரு மனிதர். 'நரிகளுக்கு குழிகள் உண்டு, ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, ஆனால் மனுஷகுமாரனுக்கோ... இல்லை.' அந்த மனிதர் எப்படி தேவனுடைய குமாரனாக இருக்க முடியும்? தாம் இருப்பதாக உரிமை கோருகிறாரே அப்படி அவரால் எவ்வாறு இருக்க முடியும்? ஆனால் அவர் அவ்வாறு தான் இருந்தார், இல்லையா? அவர் அவ்வாறு தான் இருந்தார். 1616.இப்பொழுது, அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். ஆனால் அது... அவர்களுக்கு இப்பொழுது அது மிகவும் காலதாமதமாகி விட்டது. அவரைப் புறக்கணித்தவர்கள் போய் சேருமிடம் முத்திரிக்கப்பட்டு விட்டது. தேவன் அந்தக் காரியங்களை அனுப்புகிறார், ஜனங்கள் எளிமையாகவும் தாழ்மையுள்ளவர்களாகவும் இருந்தாக வேண்டும். மேலும் கவனியுங்கள், நண்பர்களே; உங்களால் கூடிய மட்டும் எவ்வளவு அதிக எளிமையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தேவனால் உங்களோடு இடைபட முடியும். நான் கல்விக்கு விரோதமானவன் அல்ல. கல்வி எல்லாம் சரி தான். ஆனால் தேவனை விட தங்களுக்கு அதைக் குறித்து அதிகம் தெரியும் என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு ஜனங்கள் மிகவும் அதிகமாக கல்வி கற்றிருக்கிறார்கள். அப்பொழுது தான் அவர்கள் அந்த இலக்கை தவற விட்டு விடுகிறார்கள். கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்காக உங்களுடைய சொந்த அறிவில் நீங்கள் அறிந்துள்ள எல்லாவற்றையும் நீங்கள் மறந்தே ஆக வேண்டும். நல்லது, நீங்கள் அப்படியே ஒரு பிள்ளையைப் போல வந்து அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். அந்தவிதமாகத்தான் நீங்கள் தேவனை ஏற்றுக் கொள்கிறீர்கள். உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிகமாக எளிமையுள்ளவர்களாகவும், அவ்வளவு அதிகமாக தாழ்மையுள்ளவர்களாகவும் இருங்கள், உங்களை விட்டும், உங்களுடைய சொந்த கருத்துக்களை விட்டும் விலகி, அப்படியே மதிப்பு மிக்க தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதை விசுவாசியுங்கள். விசுவாசத்தினாலே தான் இக்காரியங்கள் வருகின்றன, நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவைகளினால் அல்ல. உங்களால் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. தேவனைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இந்த உலகத்தில் ஒரு மனிதனோ, பரிசுத்தவானோ, அல்லது யாருமே கிடையவே கிடையாது. உங்களால் அதைச் செய்ய முடியாது. எனவே அவர்களால் செய்ய முடியாத ஏதோவொன்றை உங்களால் செய்ய முடியும் என்று நினைத்து விடாதீர்கள், ஏனென்றால் அவர்களால்... அது இருக்க முடியாது. அது உண்மை. நீங்கள் அப்படியே அவரை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவது அதுதான், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதல்ல. 1717.ஆனால் வாக்குத்தத்தத்தின் நேரம் நெருங்கின போது, தேவன் இந்த மோசேயை அங்கு அனுப்பினார். ஜனங்கள், 'எங்கள் மேல் அதிகாரியாக உன்னை ஏற்படுத்தினது யார்? ஏன், நீ யாரோ பெரியவன் என்று எண்ணிக் கொள்கிறாய்' என்றனர். மோசேயுடைய மனப்பான்மையோ அதுவாயிருக்கவில்லை. அவன் ஒரு இரட்சகனாக அனுப்பப்பட்டான், அந்த வேளையானது அங்கேயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஜனங்கள் அந்த வேதவாக்கியங்களையும் மற்றும் காரியங்களையும் வாசித்து, வாக்குத்தத்தத்தின் வேளையானது சமீபமாக இருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள் என்றோ அல்லது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை வாசித்திருப்பார்கள் என்றும் அந்த வேளையானது சமீபமாய் இருக்கிறது என்றும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்றும் அவன் நிச்சயமாகவே எண்ணினான். அவர்களோ... வாசிக்கத் தவறி விட்டார்கள்... முடியவில்லை... தவறி விடுகின்றனர். (நான் இந்த ஒலிப்பெருக்கிக்கு மிக அருகில் நின்று கொண்டிருக்கிறேனா? இது அங்கே பின்னால் தொடர் முழக்க ஒலி எழுப்புகிறதா... அங்கே பின்னால் மேலே பால்கனியில் பின்புறத்தில், உங்களால் நான் பேசுவதை அங்கே பின்னால் சரியாகக் கேட்க முடிகிறதா? உங்களால் கேட்க முடிகிறதென்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நான் மிக அதிக சத்தத்தைக் கொண்டிருக்கவில்லை.) 1818.ஆனால் வாக்குத்தத்தமானது நெருங்கின போது, தாங்கள் புரிந்து கொண்டதாக அவர்கள் நிச்சயமாகவே நினைத்தனர், ஆனால் தேவனுடைய ஜனங்கள்... வழக்கமாக சாத்தான் அவர்களுடைய புரிந்து கொள்ளுதலைக் கொண்டு சரியாக அங்கே கிரியை செய்து, அவர்களைப் புரிந்து கொள்வதில் மந்தமானவர்களாக ஆக்கி விடுகிறான். அங்கே தான் பத்தில் ஒன்பது தடவைகள் அவர்கள் தேவனை தவற விட்டு விடுகின்றனர். ஆனால் தேவன் அங்கே தம்முடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்தார். அதன்பிறகு மோசே அவர்களை விடுவிக்கப் போன போது, ஏன், அவர்கள்-அவர்கள் அவனை நிராகரித்து விட்டு, அவனைப் புறக்கணித்து விட்டனர். அது அவர்கள் இன்னும் 40 வருடங்கள் கூடுதலாக உபத்திரவப்பட காரணமாகியது. அது சரி அல்லவா? நாற்பது வருட கூடுதல் உபத்திரவம். மோசே நிச்சயமாகவே வனாந்தரத்தின் பின்புறத்தில் ஓடிச் சென்றான். சற்று கழிந்து, ஜனங்கள் வேதனையால் புலம்பவும், கூக்குரலிடவும் துவங்கின போது, இறுதியாக அவன் தேவனால் திரும்பவும் அழைக்கப்பட்டான். அதன்பிறகு இந்த அதே மோசே, அவர்கள் அவனைப் புறக்கணித்து, பார்வோனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட போதிலும், அந்த அதே மோசேயை, அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தும்படியான ஒரு தலைவனாக இருக்கும்படியாக மறுபடியும் தேவன் அவர்களிடம் அனுப்பினார். 1919.இப்பொழுது, கவனியுங்கள். நான் உங்களிடம் கூற விரும்புவது யாதெனில், மோசேயை அனுப்பும் போதுள்ள அந்த விசித்திரமான பாகம் தான். மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை வனாந்திரத்தின் பின்புறத்தில் மேய்த்துக் கொண்டிருந்தான். ஒருநாள் எரிகிற முட்செடியில் ஒரு-ஒரு தூதன் அவனிடம் தோன்றினான். இப்பொழுது, மோசேயிடம் செய்தியைக் கொண்டு வரும்படிக்கு ஒரு தூதன் இறங்கி வந்தான், இல்லையென்றால் அவர் அவனுடைய வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். மனிதர்கள்... அவர்களால் முடியாது... நீங்கள் உங்களைத்தானே வழிநடத்திச் செல்ல முடியாது. அங்கே இரண்டு வழிகள் உள்ளன: அவை உங்களுடைய வழியும் தேவனுடைய வழியும் தான். நீங்கள் உங்களுடைய வழியில் இருக்கும் போது, நீங்கள் தேவனுடைய வழியை விட்டு வெளியே இருக்கிறீர்கள். தேவனுடைய வழியைக் கண்டு கொள்ளும்படியாக நீங்கள் உங்களுடைய சொந்த வழியை மறந்தே ஆக வேண்டும். மனிதனால் தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ள முடியாது. அவன் ஒரு ஆடு என்று அழைக்கப்பட்டான். நாம் ஆடுகளுக்கு ஒப்பிடப்படுகிறோம். ஆடு வளர்ப்பைக் குறித்து இங்கே சுற்றிலுமிருக்கிற யாராவது எதையாகிலும் அறிந்திருப்பார்களானால், ஒரு ஆடு வழிதவறிப் போகும் போது, அது முற்றிலுமாக உதவியற்றதாக இருக்கிறது. அது அப்படியே நின்று அது மரித்துப் போகும் வரையில் கத்திக் கொண்டிருக்கும். அவ்வளவு தான். அது உதவியற்றதாக இருக்கிறது. 2020.வழிகாட்டி முன்செல்லும் ஒருவர் இல்லை என்றால், நாமும் உதவியற்றவர்களாகத் தான் இருக்கிறோம். நமக்கு முன்சென்று வழிகாட்டுபவர் கிறிஸ்துவே. மோசேயை நடத்திச் செல்ல தேவன் ஒரு-ஒரு தூதனை அனுப்பின போதிலும், தேவனே மோசேயின் முன்சென்று வழிகாட்டுபவராக இருந்தார். 'வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் வாக்குத்தத்தம் பண்ணின இடத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும் நான் என்னுடைய தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.' அந்த தூதன் தான் அவனை வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டியிருந்தது. அந்த தூதன் தான் அற்புதங்களை நடப்பித்தான். மோசே எந்த அற்புதமும் செய்யவேயில்லை. மோசேக்குள் இருந்த தேவனுடைய தூதனானவர் தான் அற்புதங்களை நடப்பித்தார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்த்தருடைய தூதனானவர் அவனோடு இருந்தார். அந்த தூதன் அவர்களை வழிநடத்தி, அற்புதங்களை நடப்பித்தான். இப்பொழுது, காலங்கள் எல்லாவற்றினூடாக, வேதவாக்கியங்கள் முழுவதும், எல்லா மனிதர்களாலும், தூதர்கள் ஜனங்களை வழிநடத்த (guide) வேண்டும் என்று தான் தேவன் எப்போதுமே நியமித்திருக்கிறார். அங்கே மோசே இருந்தான்; அங்கே தானியேல் இருந்தான், ஓ, எவ்வளவு அதிகமானோரை நம்மால் கூற முடியும், வழி நெடுகிலும் எல்லாருமே. 2121.இங்கே சமீபத்தில் யாரோ ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். 'ஆனால் சகோதரன் பிரன்ஹாமே...' என்றார். (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய தொண்டையை சரி செய்கிறார் - ஆசிரியர்.) என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 'இல்லை, பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு, எந்த தூதர்களும் சபையை வழிநடத்துவதில்லை, அல்லது தனிப்பட்ட நபர்களை வழிநடத்துவதில்லை. இல்லை, ஐயா. நம்மை வழிநடத்துவது பரிசுத்த ஆவியானவர் தான்' என்று கூறினார். அது தூதனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையேயுள்ள தவறான புரிந்து கொள்ளுதல் தான். அது தவறாகும். தூதர்கள் சபையை வழிநடத்தினார்கள், அது நிச்சயமாகவே சரியாகும், இன்னும் சபையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. பிலிப்பு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் கூறுவீர்கள்? இந்தக் கட்டிடத்தில் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். பிலிப்பு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? பிலிப்பு, அப்போஸ்தலனாகிய பிலிப்பு? நிச்சயமாக, பாருங்கள். சரி, அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான், இல்லையா? அங்கே சமாரியாவில் இருந்த அவனிடம் யார் அதைப் பேசி, காசா வனாந்திரத்துக்குப் போகும்படி யார் அவனிடம் கூறினது? ஒரு தூதன் தான் கூறினான். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தானா? நிச்சயமாக அவன் கொண்டிருந்தான். 22பெந்தெகோஸ்தே நாளில், சபைக்காக ஆரம்ப செய்தியைப் (inauguration sermon) பிரசங்கம் பண்ணின, அப்போஸ்தலனாகிய பேதுரு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் கூறுகிறீர்கள்? நல்லது, அவன் அங்கே மேலே சிறைச்சாலையில் கிடந்த போது, உள்ளே வந்து... அவனைத் தொட்டு, அவனை வெளியே அழைத்துச் சென்றது யார்? அந்த தூதன் தான். அது சரியா? அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் கூறுகிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். கப்பல் தூக்கி எறியப்பட்ட போது, ஏறக்குறைய 14 நாட்களாக, அங்கே எந்த நம்பிக்கையுமே இல்லாதிருந்தது, அவன் அங்கே வெளியே வந்து, அவனுடைய கரங்களை அசைத்து உரக்க சத்தமிட்டு, 'தேவனுக்கு மகிமை, திடமனதாயிருங்கள். நான் சேவிக்கிறவராகிய கர்த்தருடைய தூதனானவர் சென்ற இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்றார்' என்று கூறினான் என்று நினைக்கிறேன். அது சரியா? வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதின (Revelator) யோவான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? முழு வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகமும் ஒரு தூதன் மூலமாக அவனுக்குக் காண்பிக்கப்பட்டது. அது சரியா? 2323.அவர்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தார்கள், நண்பர்களே. அந்த தூதனானவர்... நாம்... அது தூதர்களை ஆராதிப்பதல்ல. ஜனங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு தேவன் சபையில் தம்முடைய பணிவிடை ஆவியை அனுப்பிக் கொண்டிருக்கிறார். தேவனுக்கு முன்பாக மகிமை பெறக் கூடிய எந்த மாம்சமும் கிடையாது. மகிமையைப் பெறத்தக்க ஒருவர் இருப்பாரானால், அது இயேசு தான். ஆனால் அவர், 'கிரியைகளைச் செய்வது நானல்ல; என்னில் வாசமாயிருக்கிற என்னுடைய பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்கிறார்' என்றார். அது சரியா? அவர்கள், 'நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம்' என்றனர். அவர், 'நீங்கள் தேவனை விசுவாசிப்பீர்களானால், என்னையும் கூட விசுவாசியுங்கள்' என்றார். இப்பொழுது, அந்தத் தூதனானவர் இங்கேயிருக்கிற உங்கள் ஊழியனிடம் வந்து, அவர், 'ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி நீ செய்வாயானால்' என்றார். இப்பொழுது, அங்கே தான் கடினமான காரியம் இருக்கிறது. 'ஜனங்கள் உன்னை நம்பும்படி நீ செய்வாயானால்...' எத்தனை பேர் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் எல்லாருமே, இல்லையா? நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்கள். 2424.இப்பொழுது, இன்றிரவு கேள்வி அதுவல்ல. நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்று நான் சந்தோஷமடைகிறேன். அதுதான் உங்களை ஒரு கிறிஸ்தவனாக ஆக்குகிறது. ஆனால் இப்பொழுது நான் உங்களிடம் - உங்களிடம் கூற முயற்சித்துக் கொண்டிருப்பது அதுவல்ல. என்னுடைய பீட அழைப்பைக் கொடுக்கும் போது, நான் அதற்கு வருவேன். நீங்கள் முதலாவது அவைகளை விசுவாசித்தாக வேண்டும். நீங்கள் அவைகளோடு தொடர்பில் இல்லை என்றால், நீங்கள் இதை ஒருபோதும் அறிய மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அவைகளை எவ்வளவு அதிகமாக விசுவாசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக, நான் உங்களிடம் சத்தியத்தையே கூறிக் கொண்டிருக்கிறேன் என்றும் நான் கூறுவது சத்தியம் என்றும் இன்னுமாக நீங்கள் விசுவாசித்து தான் ஆக வேண்டும். இயேசு... அவர்... ஜனங்கள் இயேசுவை விசுவாசிக்காத காரணத்தினால், எந்த அற்புதமோ, அல்லது எதுவுமோ, எந்த வகையான அற்புதமோ (செய்ய முடியாதபடி) அவருடைய கரங்கள் கட்டப்பட்டு பிணைக்கப்பட்டிருந்தன. தேவனை விசுவாசித்த அதே ஜனங்கள் தான் அவரை கொலை செய்தனர். அது சரியா? அவர்கள் தேவனை எவ்வளவு விசுவாசித்தாலும் காரியமில்லை... அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாகவும் வைதீகமாகவும் (orthodox) இருந்தனர், மிகவும் பக்தியுள்ளவர்கள். அவர்கள் தேவனை விசுவாசித்தனர். ஆனால் அவரை விசுவாசிப்பதற்கு, ஓ, இல்லை. உ-ஊ. பாருங்கள்? அது மிகவும் அதிகமாக இருந்தது. மனி... ஒரு மனிதனா? அவர்களால் எந்த மனிதனையும் விசுவாசிக்க முடியவில்லை. அவர்களால் தேவனை விசுவாசிக்க முடிந்தது. 2525.இன்றிரவும், அநேக ஜனங்களால் தேவனை விசுவாசிக்க முடியும். நிச்சயமாக. நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் பரிசுத்த ஆவியானவரையும் மற்றவைகளையும் விசுவாசிக்கிறீர்கள். ஆனால் ஒரு மனிதன் உங்களிடம் வந்து, ஏதோவொன்றைக் கூறும் போது, அது விசுவாசிக்க கடினமாக இருக்கிறது. 'நான் உங்களை விசுவாசிக்கலாமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லையே, நண்பரே.' அங்கே தான் அது இருக்கிறது. அங்கே பாருங்கள்? ஆகையால் தான் தேவனால் முடியவில்லை... அக்காரணத்தினால் தான் உங்களுடைய மேய்ப்பர் உங்களிடம் வரும்போது, சில நேரங்களில் உங்கள் மேய்ப்பர். ஆகையால் தான் அவரால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை, நீங்கள் உங்கள் மேய்ப்பரிடத்தில் விசுவாசம் கொண்டிருந்தாக வேண்டும். அவர் ஒரு தேவ மனிதன் என்றும், தேவனுக்காக இந்தக் காரியங்களைச் செய்யும்படி அவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்றும் நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். 2626.இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலானது ஒரு சில வருடங்களுக்கு முன்பு, சிறிது காலமாக முற்றிலும் மரித்துப் போய் விட்டிருந்தது; வரலாற்று காலத்தினூடாக சம்பவிக்கிறது போலவே அது அப்படியே தோல்வி கண்டிருந்தது. அது வழக்கமாக தோல்வி கண்டது. அந்த நேரத்தில், புற்றுநோய் வெடித்து கிளம்பியது, சபையிலும் வியாதி (உண்டாகின). ஓ, என்னே. இப்பொழுது, 80 சதவீத ஜனங்கள் வியாதியஸ்தராய் உள்ளனர். ஜனங்கள்... மருத்துவ விஞ்ஞானம், நான் மரியாதைக்காக அவர்களுக்கு தலை வணங்குகிறேன் (salute). அவர்கள் மகத்தான காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் விற்பனை செய்வதற்காக மருந்துகளை உற்பத்தி செய்கிறார்கள். மேலும்... 'விற்பதற்கு' என்று நான் கூறினேன். சரி. அதை உட்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அது சரிதான். அது அவர்களுக்கு சரிதான். ஆனால் கவனியுங்கள். ஆனால் நாம் படிப்படியாக எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே சிறந்த மருத்துவர்களை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். நீங்கள் அதை நம்புகிறீர்களா? நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே சிறந்த மருத்துவமனைகளை நாம் பெற்றிருக்கிறோம். நமக்கு இருக்கிறதா? நாம் எப்பொழுதும் பழக்கப்பட்டதிலேயே சிறந்த மருந்துகளைப் பெற்றிருக்கிறோம், இல்லையா? மேலும் நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததைக் காட்டிலும் அதிகமான வியாதிகளையும் பெற்றிருக்கிறோம், இல்லையா? ஏனென்றால் நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததைக் காட்டிலும் அதிகமான அவிசுவாசத்தைக் கொண்டிருக்கிறோம், இல்லையா? அது சரிதான். அது முற்றிலும் சரியே. தேவன் மாத்திரமே சுகமளிப்பவர். அது சரியே. நீங்கள் எப்பொழுதாகிலும் கவனித்துப் பார்த்ததுண்டா? இந்த அருமையான எல்லா மருந்துகளையும், அறுவை சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை நிபுணர்களையும், மற்றவைகளையும் நாம் பெற்றிருக்கும் இந்நாட்களில்; அவர்கள் எப்போதுமே குணப்படுத்த முடியாத காரியங்களுக்காக மருத்துவமனைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியா? நம்முடைய எஜமானராகிய இயேசுவுக்கு முன்பாக எதுவுமே ஒருபோதும் வருவதேயில்லை, ஆனால் அதற்கு நிகராக இருப்பதைக் காட்டிலும் அவர் இன்னும் கூடுதலாக இருந்தார். அவரால் குணப்படுத்த முடியாதவைகள் எதுவுமே கிடையாது. எல்லாம் கூடும். அது சரியா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது சரியா? அப்படியானால் அவரால் மிகவும் குணப்படுத்த முடியாதது எதுவுமே இல்லை. 2727.இப்பொழுது, ஜனங்கள், 'தேவனே, எங்களுக்காக இதைச் செய்யும், எங்களுக்காக அதைச் செய்யும். விடுதலையை எங்களுக்கு அனுப்பும், எங்களுக்கு அனுப்பும்...' என்று கூக்குரலிடத் துவங்கின போது. அவருடைய ஜனங்களில் ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் புற்று நோயினாலும் மற்றவைகளினாலும் மரித்துக்கொண்டிருக்கிறார்கள், அப்போது தேவன் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டார். அங்கே முற்காலத்தில் எகிப்தில் அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து ஜனங்களை தேவன் வெளியே கொண்டு வந்தது போல, வியாதிப்பட்டுள்ள ஜனங்களுக்காக விடுதலையை அனுப்புவதும் அவ்வளவு தேவனால் செய்யக் கூடிய காரியம் தான் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டது போலவே அதேவிதமாக உங்களுடைய கூக்குரலையும் கேட்கும்படியாக, அவர் உங்கள் அழுகையின் சத்தத்தைக் கேட்கும்படிக்கு அவ்வளவு இரக்கமுள்ளவராக இருப்பாரல்லவா? இந்த அடையாளங்கள் பின்தொடரும் ஒரு சபையை அவர் கடைசி நாட்களில் கொண்டிருப்பார் என்று வாக்குப்பண்ணியுள்ளாரே. அது சரியல்லவா? நல்லது, கடைசி நாட்கள் இதோ இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இந்தக் காரியங்கள் சம்பவிக்க வேண்டிய நேரம் இப்பொழுது தானா? ஏன் அது இதோ இருக்கிறது; நாம் அதைப் பெற்றிருக்கிறோம். ஆமென். அது இதோ இருக்கிறது. நீங்கள் அதைக் காண்பீர்கள். 2828.நிச்சயமாக, மோசேக்குப் போக விருப்பமில்லை. அது கடினமாக இருந்தது, ஏனென்றால் அவன் ஒரு மனிதனாகவோ, ஒரு நல்ல பேச்சாளனாகவோ இருக்கவில்லை, அவன் சொல்திறமிக்கவனாகவோ மற்ற காரியங்களைக் கொண்டவனாகவோ இருக்கவில்லை; அவன் அநேக காரியங்களைக் கொண்டிருந்தான், அவன் மெதுவாகப் பேசுபவன், மற்றும் அநேக... ஆனால் அந்த வேலையைச் செய்யும்படியாக தேவனே அம்மனிதனை நியமித்திருந்தார். அது செய்யப்பட்டாக வேண்டும். இப்பொழுது, தேவன்... மோசேயிடம் கொடுத்தார். அவனோ, 'அந்த ஜனங்கள் என்னை நம்ப மாட்டார்கள்' என்றான். அவன் கூறினார்... அப்போது அவர் அவனுக்கு இரண்டு அடையாளங்களைக் கொடுத்தார். அவர், 'நீ போய் இந்த அடையாளத்தை நடப்பித்துக் காட்டு' என்றார், ஒரு சர்ப்பத்தை கீழே எறிதல், அல்லது அந்தப் பாம்பை, அல்லது அந்தக் கோலை கீழே எறிதல். அவர், 'அவர்கள் அதை நம்பாவிட்டால், நான் உனக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுப்பேன். அவர்கள் முதலாவது அடையாளத்தை நம்பாவிட்டால், அவர்கள் இரண்டாவது அடையாளத்தின் சத்தத்தை நம்புவார்கள்' என்றார். இப்பொழுது, ஜனங்களை விடுவிப்பதற்காக அவன் தேவனால் அனுப்பப்பட்டான் என்பதை, அவனைப் புறக்கணித்த ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக, அவனுக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டன. அது சரியா? அந்த கதை உண்மை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், 'ஆமென்' என்று கூறுங்கள். (சபையார், 'ஆமென்' என்கின்றனர் - ஆசிரியர்.) அது உண்மையாக இருந்தது. 2929.நல்லது, அவர் இன்றிரவும் அதே தேவனாக இருக்கிறாரா? அந்த அற்புதங்கள் இன்றிரவு கூடாத காரியமா? இல்லை, அவைகள் கூடாத காரியமல்ல. அவைகள் அப்பொழுது இருந்ததைப் போலே அவ்வளவு சாத்தியமான காரியங்களாக உள்ளன. அங்கே முற்காலத்தில், எகிப்தியரின் கீழ் அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம்முடைய ஜனங்களை விடுவித்திருப்பாரென்றால், அவ்வண்ணமாக வியாதியின் அடிமைத்தனத்தின் கீழிருந்தும் அவரால் ஜனங்களை விடுவிக்க முடியும்; ஏனென்றால் அவர் அந்த நோக்கத்துக்காகவே மரித்தார். அது மீட்பின் திட்டத்தில் இருந்தது. நீங்கள் மீட்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள்... நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறும் போது, அதுதான் உங்கள் இரட்சிப்பின் அச்சாரமாயிருக்கிறது (முன்பணம் - earnest). அது சரியா? வேறுவார்த்தைகளில் கூறினால், அது பகுதி பணமாக உள்ளது (down payment). இந்தப் பகுதி பணமே நம்மை இவ்விதமாக உணரச் செய்யுமானால், அதன் முழு இலாபமும் (full benefit) நமக்குக் கிடைக்கும் போது, அது என்னவாயிருக்கும்? அது மகிமையாய் இருக்கும், அது அவ்வாறு இருக்காதா? நல்லது அப்படியானால், நீங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து, ஒரு அழிவில்லாத சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள் என்றும் நீஙகள் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள், உயிர்த்தெழுதலில், நீங்கள் உயிர்த்தெழுவீர்கள் என்றும், ஒரு அழிவில்லாத சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள் என்றும் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? தெய்வீக சுகமளித்தல் என்பது பகுதி பணமாக உள்ளது, அல்லது உங்களுடைய அழிவில்லாத சரீரத்தினுடைய முன்பணமாக உள்ளது. என்னே! நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள்... கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு அழிவில்லாத சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள் என்பதற்கு அது அத்தாட்சியாக (evidence) இருக்கிறது. நீங்கள் ஒரு... ஐக் காணும் போது. 3030.முடமாகிப் போன சிறு வயதினர்களும், வளைந்த உறுப்புக்களைக் கொண்ட பிள்ளைகளும் இந்த மேடைக்கு வருவதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் முழுவதும் மோசமான தோற்றம் கொண்டவர்களாகவும், வழக்கத்துக்கு மாறாக மோசமான சரீர தோற்றங்களைக் கொண்டவர்களாகவும் இங்கே நின்று கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்போது அவர்களுடைய கரங்களும் கைகளும் நேராகி, சரீர சுகத்தைக் கொண்ட பிள்ளைகளாக (இயல்பான நிலையில்) மேடைக்கு வெளியே நடந்து போவதை நீங்கள் உங்கள் சொந்த கண்களினாலே காண்பீர்கள், நீங்கள் அதைக் காண்பீர்கள். எல்லா விதமான நிலைகளையும் கொண்ட ஜனங்கள் இங்கே வருவதை நீங்கள் கண்டு, அவர்கள் சுகமடைந்து இந்த மேடையை விட்டுச் செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அது என்ன? அதுதான் பகுதி பணமாக உள்ளது; அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழாக தரித்திருப்பார்களானால், அந்த நபர் ஏதோவொரு நாளில் ஒரு அழியாமையின் சரீரத்தைப் பெற்றுக் கொள்வதை அறிந்து கொள்ளும்படியாக அது அந்த அச்சாரமாக (முன்பணம்) உள்ளது. புற்றுநோய் போய் விடுகிறது, குருடரும், செவிடரும், ஊமையர்களும்... அது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாக இருக்கிறது. 3131.இப்பொழுது, இந்நேரத்தினுடைய அழைப்பில், இதற்கு வெளியே பேசிக் கொண்டிருக்கிறேன் நான்... நான் மிகவும் எளிய பெற்றோர்களுக்கு, மிகவும் எளிமையான ஒரு வீட்டில் பிறந்தேன். எனக்கு எந்தக் கல்வியுமே கிடையாது, நான்... நான் சற்று முன்பு கல்வியைக் குறித்த கருத்தைக் குறிப்பிட்ட போது, நான் என்னுடைய அறியாமைக்கு ஊன்று கோலாக (அதை எடுக்க) முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், தேவனை அறிந்து கொள்ள கல்வி அவசியமில்லை; தேவனை அறிந்து கொள்ளும்படிக்கு ஒரு தாழ்மையான இருதயமே அவசியமாயிருக்கிறது. நான் ஏழையாகவே வளர்க்கப்பட்டேன். நான் ஒரு பக்தியற்ற குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன். ஆனால் நான் பிறந்த அதே நேரத்திலிருந்து ஏதோவொன்று சம்பவித்தது, அது என்னுடைய சிறப்போ, எனது பெற்றோர்களின் சிறப்போ அல்ல, ஆனால் அது தேவனுடைய முன்னறிவின் மூலமாகத் தான். பாருங்கள்? அவர் அதைக் கொண்டு வந்தார். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவர் விரும்புகிற எதையும் அவரால் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை காண்பிக்கும்படியாகத்தான் என்று நினைக்கிறேன், அது வத்திக்கான் பட்டணத்திலிருந்து வந்தாலும், அல்லது-அல்லது அவர் அதை குப்பைக் கூள குவியலிலிருந்து எடுத்து அதை உண்டாக்கக் கூடுமானாலும் (பாருங்கள்?), அது எங்கிருந்து வந்தாலும். 3232.அதன்பிறகு அதிலிருந்து இப்போது வரை ஜீவியம் முழுவதும்... அந்தக் கதை உங்களில் அநேகருக்குத் தெரியும். நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள், அது எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் தோன்றினது என்பதை. நான் ஒரு சிறு பையனாக, ஏறக்குறைய 12 வயதுள்ளவனாக இருந்த போது, அது முதலாவது... உண்டானது. ஏறக்குறைய 7 வயதில், அது முதலாவது காணக்கூடிய விதத்தில் ஒரு புதரில் வீசும் காற்றாகத் தோன்றினது. பிறகு அதற்குப் பிற்பாடு, மதத்தைக் குறித்து எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது... நான் அறிந்திருந்த ஒரே காரியம் என்னவென்றால், அங்கே ஒரு தேவன் இருந்தார் என்று யாரோ ஒருவர் என்னிடம் கூறியிருந்தார், நான் ஒரு மனிதனாக இருந்தது மட்டுமாக, அதைக் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம் அவ்வளவு தான். அதன்பிறகு நான் மனந்திரும்பி, பாப்டிஸ்டு சபையில் சேர்ந்து கொண்ட பிற்பாடு... ஒருநாள், மே மாதம் 7ம் தேதி, உள்ளே வந்து கொண்டிருந்த போது... நான் இந்தியானாவில் ஒரு-ஒரு காட்டிலாகா அதிகாரியாக (game warden) இருந்தேன். இன்று தற்செயலாக தெருவில் ஒரு மனிதனை சந்தித்தேன். அவர் ஒருக்கால் இப்பொழுது இங்கே இந்த அரங்கத்தில் இருக்கலாம், அவர் தான் இந்தியானாவிலுள்ள காரிடானிலிருந்து வந்துள்ள திரு. பிறைஸ் அவர்கள். நான் அங்கே அந்த வழியாக ரோந்து போகும் போது, வழக்கமாக அவருடைய வீட்டில் தான் தங்குவேன். அவர் அநேகமாக இப்பொழுது கட்டிடத்தில் இருக்கலாம். ஹூஸ்டனில் அந்தத் தெருவில் நான் அவரை சிறிது நேரம் சந்தித்ததை நான் அறிவேன். ஆனால் அவரும் அவருடைய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் விடுமுறையைக் கழிக்கும்படி ஃபுளோரிடா வழியாகப் பிரயாணம் செய்து கூட்டத்திற்கு வந்தார்கள். 3333.எல்லா நேரமும் என்னுடைய இருதயத்தை ஈர்த்துக் கொள்ளுகிற ஏதோவொன்று அங்கேயுள்ளது. ஆனால் அந்த நாளில், அது தன்னைத்தான் காணக்கூடிய விதத்தில் அறியச் செய்தது. அது ஏறக்குறைய ஆறு அடி உயரமுடைய ஒரு மனிதனாக இருந்தது, அவருக்கு கொஞ்சம் 200 பவுண்டு எடை இருக்கும். அது இறங்கி வந்த போது, அது வருகிற போது... அதற்கும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அது ஒரு ஒளியின் வடிவில் இறங்கி வந்து, நான் இருந்த இடத்தின் மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அது அநேக நேரங்களில் ஒரு நட்சத்திரத்தின் வடிவில் இறங்கி வருகிறது, அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் நின்று கொண்டு அதைப் பார்த்தனர். அது சரியாக அரங்கங்களிலும் மற்றவைகளிலும் காணக்கூடிய விதத்தில் தோன்றியது. வெவ்வேறு காரியங்கள் சம்பவித்துள்ளன. இந்த நேரத்தில் அவர் வந்த போது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். மேலும் அவர்... நான்-நான் பயந்து போனேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தார். அவர், 'பயப்படாதே; உலகத்திலுள்ள ஜனங்களுக்கு ஒரு தெய்வீக சுகமளித்தலின் வரத்தைக் கொண்டு செல்லுவாய் என்பதை குறிப்பிடும் படியாகத்தான் உன்னுடைய வினோதமான பிறப்பும் வினோதமான ஜீவியமும் இருந்து வருகிறது என்பதை உன்னிடம் கூறும்படியாக, நான் தேவனுடைய சமூகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்' என்றார். மேலும் கூறினார்... மேலும்-மேலும், 'அவர்கள் உன்னை நம்பும்படி நீ செய்து, உத்தமமாயிருந்தாயானால், நீ ஜெபிக்கும் போது, உன்னுடைய ஜெபங்களுக்கு முன்பாக எதுவுமே நிற்காது' என்றார். நல்லது, நானோ, 'ஐயா, எனக்கு கல்வியறிவு கிடையாது' என்றேன். அவர், 'நான் உன்னோடு இருப்பேன். உனது இடது கையால் ஜனங்களுடைய வலது கையைப் பிடிக்கும் போது அது சம்பவிக்கும் என்பதை நீ நிச்சயமாக அறியக்கடவாய். நீ அதன் விளைபயனை உன்னுடைய கரத்தில் உணர்ந்து கொள்ளுவாய்' (இப்பொழுது, நான் அதை அதிர்வுகள் (vibrations) என்று அழைக்கிறேன்.) 'நீ அதனோடு பழக்கப்பட்டு விடுவாய். ஜனங்களுடைய சகல வியாதிகளையும் நீ அவர்களிடம் கூறுவாய், அவர்கள் தங்கள் சரீரத்தில் எதைக் கொண்டிருந்தாலும் அதை நீ அவர்களிடம் கூறுவாய். அப்போது நீ...' என்றார். 3434.இப்பொழுது, வேறொரு நேரம் நான் டெக்ஸூஸில் இருந்த போது, அது செயல்பட்டது. அது சரியா? உங்களில் யாராவது இதற்கு முன்பு என்னுடைய கூட்டத்தில் இருந்து, அது செயல்பட்டிருந்தால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இந்த... இப்பொழுது, உங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிற ஜனங்களாகிய நீங்கள், எல்லாரும் என்னுடைய கூட்டத்தில் இருந்து, அது கிரியை செய்ததை அறிந்துள்ளீர்கள். துல்லியமாக அல்ல, ஏனென்றால் ஏராளமான வியாதிகள் இருப்பதாக நான்-நான் நினைத்தேன். பாருங்கள்? ஏனென்றால் அதை எப்படி உணருவது என்பதை நான் அறியாதிருந்தேன். நான் ஒரு வினோதமான உணர்வை உணர்ந்தேன்; சிலசமயங்களில் பெண்களுக்குள்ள கோளாறும் புற்று நோயும். என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அது அதிகமாக ஒன்று போலவே ஒலிக்கிறது, இருந்தது... அது அதிகமாக ஒன்று போலவே உணரப்பட்டது. 'என்னுடைய கரத்தின் மேல் காணக்கூடிய விதத்திலான விளைபயனை நீங்கள் கண்டீர்களா?' மேலும் மற்றவைகள். 3535.நான் ஜனங்களாகிய உங்களிடம் கூறினேன்... இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நான் ஜனங்களாகிய உங்களிடம் கூறினேன். நான், ''நீ உத்தமமாயிருந்தால் (பாருங்கள்?), அது சம்பவிக்கும், ஜனங்களுடைய இருதயங்களிலுள்ள உண்மையான இரகசியங்களையும், அவர்களுடைய ஜீவியத்தில் தாங்கள் செய்துள்ள தவறான காரியங்களையும் மற்றவைகளையும் நீ அவர்களிடம் கூறுவாய், நான் கொடுத்திருக்கிறதில் நீ உத்தமமாயிருந்தால்' என்று அவர் என்னிடம் சொன்னார்' என்று நான் கூறினேன். நான் அதைக் கூறினேனா? நான் அதைக் கூறினது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? நல்லது, அது சம்பவித்து விட்டது. அது கடந்த... ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு, கால்கரியில் நின்று கொண்டிருந்தது, அல்லது ரெஜினா, சாஸ்கட்ச்சிவானில் நின்று கொண்டிருந்தது. நான் என்னுடைய சபையோரைப் பார்த்தவாறு இவ்விதமாக மேடையின் மேல் நின்று பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு மகத்தான கூட்டத்தைக் கொண்டிருந்தோம். அந்த இரவில் அக்கூடாரத்தில் குறிப்பிடும்படியாக ஏறக்குறைய 10,000 பேர் கூடியிருந்தார்கள் என்று நினைக்கிறேன், அல்லது அது குயின் கார்டன்ஸில் என்று நினைக்கிறேன், அவர்கள் அங்கே வெளியே நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர். நான் பேசிக் கொண்டிருந்தேன், நான், 'இப்பொழுது, நான் உத்தமமாயிருந்தால், (நான் ஒவ்வொரு கூட்டத்திலும் அவ்வாறு இருந்தேன்), ஏதோவொரு நாளில், ஜனங்களுடைய இருதயத்திலுள்ள இரகசியங்களைக் கூறுவது சம்பவிக்கும் என்று கர்த்தர் என்னிடம் கூறியிருக்கிறார்' என்றேன். 3636.நாம் முடிக்கும் முன்பு, இதை உங்களிடம் கூறுகிறேன். நான் மேடையின் மேல் இருந்து தண்ணீர் குடிக்கும் படியாக சுற்றிலும் திரும்பினேன். அவர்கள் ஜெப வரிசையை அமைத்துக் கொண்டிருந்தனர். நான் தண்ணீர் குடிக்கும்படியாக சுற்றும் முற்றும் திரும்பின போது, என்னுடைய கனடா தேசத்து மேலாளராகிய சங்கை திரு. பாக்ஸ்டர் அவர்கள்... நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன், அவர் தன்னுடைய கைக்குட்டையை எடுத்து, என்னுடைய நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக' என்றார். நான், 'உமக்கு நன்றி, சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே' என்றேன். நான் சுற்றும் முற்றும் திரும்பினேன்; அவர் நடந்து சென்று விட்டார்; அங்கே ஒலிப்பெருக்கியின் அருகில் ஒரு சீமாட்டி நின்று கொண்டிருந்தாள், அல்லது ஜெப வரிசையிலிருந்து மேலே அழைத்து வரப்பட்டாள். நான் அவ்விதமாக நடந்து சென்றேன். நான் அந்த சீமாட்டியைப் பார்த்து, நான், 'வணக்கம்' என்றேன். அவளும், 'வணக்கம்' என்றாள். ஏதோவொன்று சம்பவித்தது. எங்கேயோ ஏதோவொன்று சம்பவித்ததை நான்-நான் அறிந்து கொண்டேன். நான் அதற்கு முன்பு அவ்விதமாக ஒருபோதும் அதை உணர்ந்ததேயில்லை. அது அந்த அபிஷேகமாயிருந்தது. அது பரிசுத்த ஆவியானவர் போன்று உணரவில்லை. அது மிகவும் பயபக்தியான ஒரு உணர்வாயிருந்தது. 3737.நான் அந்தப் பெண்மணியை நோக்கிப் பார்த்தேன், அவள் அங்கே அவளுடைய வழக்கமான உருவ அளவில் (பருமன்) நின்று கொண்டிருந்தாள். அப்போது அவள் மிகவும் சிறிய உருவமாக ஆவதை, கடந்த காலத்துக்குப் போகத் துவங்குவதை நான் கண்டேன். இப்பொழுது, நீங்கள் சரியாக இங்கேயே அவ்விதம் பேசப்படுவதை கேட்பீர்கள். ஒரு சின்னஞ்சிறிய பெண் பிள்ளை கீழே நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன், அவள் ஏறக்குறைய 12 வயதுடைய சிறு பெண் பிள்ளையாக ஆவதை நான் கண்டேன். அவள் ஒரு சாய்வு மேஜையின் அருகில் உட்கார்ந்திருப்பதை நான் கண்டேன். நான், 'நண்பர்களே, ஏதோவொன்று சம்பவித்தது. நான் ஒரு சிறு பெண் பிள்ளையைப் பார்க்கிறேன். அந்தப் பெண்மணி என்னை விட்டு கடந்து சென்று விட்டார்கள்' என்றேன். நான், 'நான் ஒரு சின்னஞ்சிறிய - சிறு பெண் பிள்ளையைப் பார்க்கிறேன். அவள் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவள்... ஒரு பள்ளியின் அறையில் உட்கார்ந்து கொண்டு, அவள் தன்னுடைய பென்சிலை தட்டிக் கொண்டிருக்கிறாள். இல்லை, அது ஒரு பேனா. ஓ, அது பறந்து சென்று, அவளுடைய கண்ணைத் தாக்கினதை நான்-நான் காண்கிறேன்' என்றேன். அப்போது அந்தப் பெண்மணி கத்தி கூச்சலிடத் துவங்கினாள். அது என்னை விட்டுப் போனது. அவள், 'சகோதரன் பிரன்ஹாமே, அது நான் தான். என்னுடைய வலது கண் குருடாயுள்ளது. அந்தப் பேனா தான்...' என்றாள். நான், 'நல்லது, நான் அதைப் போன்ற எதையும் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. நல்லது, சொல்...' என்றேன். 3838.அங்கே அவள் மீண்டும் கடந்த காலத்துக்கு போனாள். நான் ஏறக்குறைய 16 வயதுள்ள ஒரு வாலிபப் பெண்ணைக் கண்டேன், அவளால் கூடியமட்டும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு பெரிய நாடாவை (ribbon) தன்னுடைய தலைமயிரில் கட்டியிருந்தாள், இரட்டைப் பின்னல் அவளுக்கு பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பல வண்ணக் கட்டங்களையுடைய (checkered) ஆடையை அணிந்திருந்து, அவள் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். நான் பார்த்த போது, அங்கே ஒரு பெரிய மஞ்சள் நிற நாய் அவளைத் துரத்திக் கொண்டிருந்தது. நான், 'பலவண்ணக் கட்டங்களை உடைய உடையை உடுத்தியுள்ள ஒரு வாலிப பெண்ணை நான் காண்கிறேன்...' என்றேன். நான் எதைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றும், எனக்கு முன்பாக எதை காண்கிறேன் என்றும் கூறத் துவங்கினேன். நான், 'அவள் மேலே கூரையிட்ட நுழைவாயிலில் போகிறாள். ஒரு சீமாட்டி அங்கே ஓடி வந்து... அவளை உள்ளே அழைத்துச் செல்வதை நான் காண்கிறேன்' என்றேன். அவள் கூச்சலிடத் துவங்கினாள். அவள், 'அது நான் தான், அது நான் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது நடந்தது. என்னுடைய ஜீவியத்தில் இதற்கு முன்பு அதைக் குறித்து நான் ஒருபோதும் எண்ணினதே கிடையாது' என்றாள். நான், 'நண்பர்களே, இங்கே ஏதோவொன்று சம்பவித்தது. என்ன விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை' என்றேன். நான் ஆரம்பித்து, நான், 'சகோதரியே, உங்கள் கரத்தை என்னிடம் கொடுங்கள்' என்றேன். நான் அவளுடைய கரத்தைப் பிடித்து... துவங்கினேன். நான், 'நல்லது, நான்-நான் அதிலிருந்து எந்த அதிர்வையும் உணரவில்லையே' என்றேன். 3939.நான் அவளுடைய கரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் மீண்டும் மேலே நோக்கிப் பார்த்தேன், அப்போது ஒரு பெண்மணி ஒரு வெள்ளை நிற வீட்டிலிருந்து, அல்லது, ஒரு பெரிய பண்ணைக் கட்டிடத்திலிருந்து, சிவப்பு நிறத்தில் காணப்பட்ட பெரிய பண்ணைக் கட்டிடத்திலிருந்து ஒரு வெள்ளை நிற வீட்டை நோக்கியபடி வந்து கொண்டிருப்பதை நான் கண்டேன். அவள் ஒரு-ஒரு மேலாடையை அணிந்திருந்து, இவ்விதமாக எதையோ பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மேலும் அவள் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வருவதை நான் கண்டேன். நான், 'ஒரு பெண்மணி வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சகோதரியே, அது நீங்கள் தான்' என்றேன். அது அப்போதைய இயல்பான நேரமாகத் தான் இருந்தது. அவள் அதே பெண்மணி தான் என்பதை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான், 'இப்பொழுது, நான் அந்தப் பெண்மணியைக் காண்கிறேன். நீங்கள்-நீங்கள்மேலே படிகளில் ஏறிவரத் துவங்குகிறீர்கள். அங்கே உங்கள் வலது பக்கத்தில் பூக்கள் வளர்ந்திருக்கிற ஒரு இடம் உள்ளது, அந்தப் படிக்கட்டுகள் இவ்விதமாக மேலே போகிறது. உங்களுடைய முதுகில் ஏதோ கோளாறு உள்ளது. உங்களால் அந்தப் படிகளில் மேலே ஏற முடியாமல் இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் பக்கவாட்டில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள்' என்றேன். அவள், 'என்னால் எப்பொழுதாகிலும் சகோதரன் பிரன்ஹாமுடைய கூட்டத்திற்குப் போக முடியுமானால், அதேல்லாம் முடிந்து விடும்' என்று கூறுவதை நான் கேட்டேன். நான் அதைக் கூறின போது, யாரோ ஒருவர் அந்தப் பெண்மணியை பிடித்துக் கொண்டார்கள். அவள் மயக்கமடையத் துவங்கினாள். மேலும் அவள் வந்த போது, அவளுடைய குருடான கண் சுகமடைந்து விட்டது. அவளுடைய முதுகை அப்படியே எந்தவிதமாகவும் அசைக்க முடிந்தது... அவள்... அவளுடைய கீல்வாதம் சரியாகி விட்டது. அவளுடைய முதுகை அவளால் எந்த விதமாகவும் அசைக்க முடிந்தது, அவள் அவ்விதமாக பரிபூரண சுகத்தைப் பெற்றுக் கொண்டாள். நான், 'நல்லது, ஏதோவொன்று சம்பவித்து விட்டது' என்றேன். 40அப்போது சகோதரன் பாக்ஸ்டர் அவர்கள் ஒலிப்பெருக்கியைப் பிடுங்கி, அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, சம்பவிக்கும் என்று நீர் சற்று முன்பு கூறினது அதுதான்' என்றார். கட்டிடம் முழுவதும் எல்லாவிடங்களிலும் யாவரும் அலறி கூச்சலிடத் துவங்கினார்கள். அப்போது, ஊன்றுகோல்கள் 'சட சட' வென்று தொடர்ந்து ஒலி உண்டாக்குவதை நான் கேட்டேன். நான் பார்த்த போது, இதோ ஒரு வாலிபன் வருகிறான். அவன், 'சகோதரன் பிரன்ஹாமே' என்றான். அவன் தன்னுடைய கக்கதண்டங்கள் மேல் நொண்ணி நொண்ணி நடந்து வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன், 'என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள்' என்றான். நான், 'நல்லது, அன்பு சகோதரனே... நான்...' என்றேன். அவனை மேடைக்கு வெளியே வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும்படி உதவிக்காரர்கள் வந்தனர், ஏனென்றால் அவன் ஜெப அட்டை இல்லாமல் வந்து கொண்டிருந்தான். நான், 'சற்று பொறுங்கள்' என்றேன். அவன், 'நல்லது, சகோதரனே...' என்றான். நான், 'நீ பின்னே சென்று உனக்கு ஒரு ஜெப அட்டையைப் வாங்கிக் கொள், மகனே' என்றேன். அவன்... அவன், 'நல்லது, என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள். ஒரே காரியம் மட்டுமே நான்...' என்றான். அப்படியே அழுது கொண்டிருந்தான், உங்களுக்குத் தெரியும். அவன், 'நீர் என்னிடம் கூற வேண்டுமென்று நான் விரும்புவதெல்லாம் அவ்வளவு தான், என்ன செய்வது' என்றான். நான், 'நல்லது, உன்னிடம் என்ன கூற வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. சற்று பொறுங்கள். உதவிக்காரர்களே, அவனைக் கொண்டு போகாதீர்கள்' என்றேன். நான், 'நீ இன்று காலையில் ரெஜினா பீச்சிலிருந்து புறப்பட்டாய்' என்றேன். அவன் ஒரு - ஒரு... பக்கத்திற்கு அருகில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். நான், 'நீ ஒரு பேருந்தைப் பிடித்தாய். நீ வாசலின் மீதாக மேலே (ஏறி) 'ரெஜினா பீச்' என்றாய். ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் உன்னைப் போய் விடு என்று தள்ளி விடுவதை நான் காண்கிறேன். அதுதான் உன்னுடைய தகப்பனாரும் தாயாரும்' என்றேன். அவன், 'அது உண்மை' என்றான். நான், 'உனக்கு கொஞ்சம் பணத்தை கடனாக கொடுத்த வேறொரு மனிதனை நான் காண்கிறேன், அது... உன்னுடைய தகப்பனாரைப் போன்று காணப்படுகிறது' என்றேன். 'அது என்னுடைய மாமா' என்றான். நான், 'நான் உன்னைக் காண்கிறேன்... நீ... இப்பொழுது, நீ ஒரு அறைக்குள் இருக்கிறதை நான் காண்கிறேன், அதில் சுவருக்கு வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஜன்னல் (bay window) உள்ளது. நீ வெளியே அந்தப் பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறாய்' என்றேன். 'அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது என்னுடைய அத்தை. நான் அவ்விதமாக அவர்களுடைய அறையில் தான் வாழ்ந்து வருகிறேன். சகோதரன் பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும்?' என்றான். நான், 'நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டேன். அவன், 'என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்' என்றான். நான், 'உன்னுடைய காலூன்றி எழுந்து நில், இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி விட்டார்' என்றேன். அப்போது அவனுடைய கக்கதண்டங்களை கீழே போட்டு விட்டான், இரண்டு கால்களும் நேரானது, கட்டிடம் முழுவதும் அவன் சென்று, தேவனை மகிமைப் படுத்திக் கொண்டிருந்தான். 4141.அது முதற்கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக அது துவங்கியது, அது இன்னும் நிற்கவேயில்லை. அது உண்மை. அது உண்மை தான், நண்பர்களே. அது சம்பவிக்கும், அவர்கள் முதலாவதற்கு செவிகொடுக்காவிட்டால், அவர்கள் இரண்டாவதற்கு செவி கொடுப்பார்கள். அதன்பிறகு, அதற்கும் ஒரு சில இரவுகள் கழித்து, நான் ஒண்டாரியோவிலுள்ள வின்ட்சரில் இருந்தேன். அங்கே அந்தக் கூட்டத்தில் 14,000 பேர்களைக் கொண்டிருந்தோம். அது தாங்களாகவே உண்டாக்கிக் கொண்ட (make-up) ஒரு கூட்டம் தான் என்று எண்ணிக் கொண்ட ஒரு மனிதன் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் சென்று (ஜெப) வரிசைகளில் ஒன்றிலுள்ள ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக் கொண்டு, அவன் ஒரு நோயாளி என்றும், அவனுக்கு தேவை உள்ளதென்றும் பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்தான். அவன் போய் தனக்கு எல்லாவிதமான வியாதிகளும் அதைப் போன்ற மற்றவைகளும் இருக்கிறதென்று ஜெப அட்டையில் எழுதி வைத்துக் கொண்டான். அவன் சுற்றி வந்து, ஜெப வரிசையின் மேலாளராகிய அம்மனிதரிடம் அதைக் கொடுத்தான். நான் அந்த அட்டைகளை ஒருபோதும் பார்ப்பதேயில்லை. அவர்கள் அங்கே அந்த அட்டைகளில் எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அவன், 'இந்த எல்லாமும் எதைப் பற்றியது என்று நான் பார்ப்பேன்' என்று நினைத்தான். அவன் உள்ளே வந்து, ஒரு ஜெப அட்டையில் அதை எழுதி வைத்து விட்டு, அவன் மேலே நடந்து வந்தான். நான், 'மாலை வணக்கம், ஐயா' என்றேன். அவனும், 'வணக்கம்' என்றான். நான் அவனுடைய கையைப் பிடித்தேன். அங்கே எந்த அதிர்வுகளும் இல்லை. நான் அவனை நோக்கிப் பார்த்தேன்; அவனும், மேலும் இரண்டு மனிதர்களும் ஒரு அறையில் மேஜைக்கு அப்பால் நின்று கொண்டு, அதை ஒப்பனை செய்து (மேக்அப்) கொண்டிருந்ததை நான் கண்டேன். நான், 'யாரோ ஒருவரை ஏமாற்ற முயற்சிக்கும்படிக்கு உன்னுடைய இருதயத்தில் நீ நோக்கம் கொண்டதென்ன? தேவன் உன்னை இப்பொழுதே சாகும்படியாக அடிக்கத்தக்கதாக உள்ளார்' என்றேன். 4242.அவன் கீழே தரையில் விழுந்து, அவனுடைய உச்ச குரலில் சத்தமிடத் துவங்கினான். அவன், 'தேவனே, என்மேல் இரக்கமாயிரும்' என்றான். நான், 'நண்பா, நீ ஏன் அதைச் செய்தாய்?' என்றேன். அவன், 'சகோதரன் பிரன்ஹாமே, அது (நீங்களாகவே) உண்டாக்கி செய்யப்படுவது என்று நான்-நான் நினைத்தேன். நான்-நான்-நான்நேர்மையாக அதைச் செய்தேன், எனக்கு மன்னிப்பு உண்டா?' என்றான். அதுவே அவனுடைய முடிவாயிற்று. 4343.இங்கே ஒரு சில இரவுகளுக்கு முன்பு, ஓ, ஒரு பெண்மணி, ஜனங்கள் தாங்கள் மேடைக்கு வரும் போது, அவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் அருவருக்கத்தக்கதும், இழிவானதுமான காரியங்களைச் செய்தவர்களாயிருக்கிறார்கள். இப்பொழுது, நண்பர்களே, அந்தக் காரியங்கள் இங்கே இந்தக் கூட்டத்தினர் முன்பாக வெளிப்படையாகக் கூறப்படும் என்பது நினைவிருக்கட்டும்; உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் என்ன செய்திருந்தாலும், அது இங்கே கூறப்படும். எனவே, உங்கள் இருதயத்தில் ஏதாகிலும் இருந்து, அது அறியப்பட உங்களுக்கு விருப்பமில்லாதிருக்குமானால், அது அறியப்பட நீங்கள் விரும்பவில்லை என்றால் ஜெப வரிசைக்கு வெளியே இருந்து விடுங்கள். நீங்கள் ஒரு பரிபூரண விசுவாசத்தோடு வந்து, அல்லது உங்களை மன்னித்து, அதை இரத்தத்தின் கீழே, மறதிக்கடலில் போட்டு விடும்படி தேவனிடம் கேட்கா - கேட்கா விட்டால், அது என்னவாயிருந்தாலும். ஏனென்றால் என்ன கூறுகிறேன் என்பதற்கும்; என்ன வெளியே கொண்டு வரப்படுகிறது என்பதற்கும் நான் பொறுப்பாளி அல்ல. ஏனென்றால் அது உங்களுடைய ஜீவியத்தில் இருக்குமானால், அது வெளியே வந்து விடும். 4444.இப்பொழுது, அதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள், ஏனென்றால் தேவன் அதை வாக்குப்பண்ணியிருக்கிறார். அது இதுவரையிலும் தவறிப் போனதேயில்லை, அது இங்கே ஹூஸ்டனிலும் தவறிப் போகாது. அது உண்மை. இன்னும் தேவன் இங்கேயிருக்கிறார், அவர் பதிலளிப்பார். இப்பொழுது, அது என்ன? நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, அது எதை அர்த்தப்படுத்துகிறது?' என்று கேட்கலாம். ஒருசமயம் வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கு சிறிது பயம் எனக்கு இருந்தது. ஆனால் நண்பனே, இதோ அது இருக்கிறது, நான் அதை உங்களிடம் கூற முடியும். அந்தக் காரியங்கள், அந்த வியாதிகள் கூறப்பட்டன (அது பரிபூரணமாய் உள்ளது.), அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களும் கூறப்பட்டன. அவர்கள் முதலாவதை விசுவாசிக்காவிட்டால், நான் அவர்களை அந்த முதலாவதற்கு கொண்டு வர முடியாது, அப்படியானால் அவர்கள் இரண்டாவதில் இருப்பார்கள். அது கடந்த காலத்திற்கு சென்று, அவர்களுடைய ஜீவியத்தைத் தேடிப்பார்த்து, கண்டுபிடிக்கத் துவங்கி, அவர்களிடம் கூறும். 4545.இப்பொழுது, என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு உங்களுடைய சிதறாத கவனத்தை எனக்கு செலுத்துங்கள். நண்பனே, அது யாரையும் சுகப்படுத்துவதில்லை. அது அந்த நபருடைய விசுவாசத்தை அதிகரிக்க மாத்திரமே செய்கிறது. அந்த நபர் இங்கே இருக்கும் போது, அவர் விசுவாசிக்கிறார் என்று என்னிடம் வந்து அவர் கூறியாக வேண்டும், நான் அதற்காக அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் அந்த அபிஷேகத்தின் கீழிருக்கும் போது, அது சரியாக இப்பொழுதே இருக்கிறது, இதன்படி, அவன் வந்து, அதை ஏமாற்ற முடியாது, அவனுக்கு விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியும். அவனிடம் விசுவாசம் உள்ளது என்று அவன் நினைத்துக் கொள்ளலாம். அவர்களிடம் விசுவாசம் இல்லாத போதே அவர்கள் விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக ஜனங்கள் எண்ணிக் கொள்கிற ஒரு காரியம் உண்டு. அது சரி அல்லவா? ஆனால் அவர்கள் இங்கே இருந்து, அவர்களிடம் விசுவாசம் உள்ளது என்று கூறிக் கொண்டிருந்தால், அது இங்கே மேலே இருக்காது. அது ஒரு இசைக்கருவியிலுள்ள ஒரு நரம்பை இசைப்பது போன்றது. நீங்கள்... அது அதிகரித்து, இங்கே மேலேயுள்ள இதனுடன் ஒன்றுபடும்போது, காரியம் ஆயத்தமாகி விடுகிறது. அம்மாதிரியான விசுவாசம் வருகிற போது, அந்த நபரைக் கட்டியிருக்கிற எந்த பிசாசும் கட்டவிழ்க்கப்பட்டாக வேண்டும். நீங்கள் இங்கே மேலே இருக்க வேண்டியதில்லை; அது சரியாக அங்கே வெளியிலும், நீங்கள் எங்கே இருந்தாலும் கிரியை செய்யும். 4646.இப்பொழுது, செய்யப்பட வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், ஜனங்களின் விசுவாசத்தைத் தூண்டுவது தான், ஜனங்களை சுகப்படுத்தவே தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்பதை அவர்கள் நிச்சயம் காண வேண்டும். இப்பொழுது, அது சுகமளித்தலுக்கு வருகிற அந்த அளவிற்கு, அது தேவனிடத்தில் உள்ள உங்கள் விசுவாசமாய் இருக்கிறது. உங்கள் மேய்ப்பரே உங்களுடைய சொந்த சபையில் உங்களை எண்ணையினால் அபிஷேகிக்கலாம். நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள்; அப்பொழுது அது அதே முடிவுகளைக் கொண்டு வரும். அது உண்மை. தேவன் தான் சுகமளிப்பவர். எந்த மனிதனும் சுகமளிப்பவனல்ல; தேவனே சுகமளிப்பவர். ஜனங்களைக் குறித்த தேவனுடைய மனப்பான்மை எத்தகையது என்பதை காண்பிப்பதற்காகவும், தேவனை விசுவாசிக்கும்படியாக ஜனங்களாகிய உங்களை மீண்டும் கொண்டு வருவதற்கு மட்டுமே இந்த வரங்கள் உள்ளன. ஏனென்றால் உங்களுடைய வியாதிப்பட்ட சரீரத்திற்காக விசுவாசம் கொள்ள உங்களுக்குப் போதுமான விசுவாசம் இல்லை என்றால், எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக போதுமான விசுவாசம் எவ்வாறு உங்களுக்கு இருக்கப் போகிறது? புரிகிறதா? ஜனங்கள் பெற்றிருக்கிறார்கள்... 4747.இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டார். 'நான் பூமிக்கு திரும்பி வரும் போது, விசுவாசத்தைக் காண்பேனோ?' என்று கேட்டார். முழுவதும் விசுவாசத்தால் நிரம்பியுள்ள ஒரு மகத்தான சபை அங்கே இருந்தாக வேண்டும். விசுவாசத்தை தூண்டி எழுப்பவும், விசுவாசத்தைக் கொண்டு வரவும், விசுவாசம் என்றால் என்ன என்பதை நிரூபிக்கவுமே தேவன் இந்தக் காரியங்களை அனுப்பியுள்ளார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அந்தக் காரியங்கள்... அந்தவிதமாகத்தான் அது-அதுசெய்து முடிக்கப்படுகிறது. இப்பொழுது... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... இதை இழந்து போகாத அண்டைவீட்டுக்காரரோ மற்றும் யாரோ ஒருவர். நீங்கள் அறிந்து கொள்ளும்படியாக ஏதோவொன்று சரியாக இப்பொழுதுதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களிடம் கூற நினைத்தேன், நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள்... இப்பொழுது, அது உண்மை, இல்லையா? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... இன்று அவர்கள் உங்களுக்கு அந்த ஜெப அட்டையைக் கொடுத்த போது, நீங்கள் மிகவும் சந்தோஷமடைந்தீர்கள். இங்கே இருப்பது முதலாம் இரவு என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் மிகவும் சந்தோஷமாயிருந்தீர்கள், இல்லையா? இப்பொழுது, எனக்கு அது எப்படி தெரியும்? அது சரிதான், சகோதரியே. சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களை உங்களிடம் அப்படியே கூறிக் கொண்டிருக்கிறது; இப்பொழுதோ அது மாறுகிறது, அது இந்நேரத்துக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது, இருப்பினும் என்னுடைய அண்டை வீட்டாராயிருக்கிறது; அந்தக் காரியங்கள் தேவ பக்தியோடு கூடிய சத்தியமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அது சரியா? அது சரியே. இப்பொழுது, நீங்கள் இதைச் செய்வீர்களானால், நீங்கள் இப்பொழுது அதை பயபக்தியோடு விசுவாசிப்பீர்களானால் நான்... நான் உங்களிடம் சத்தியத்தையே கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரி, இப்பொழுது, நான் உங்களிடம் கூறுவது சத்தியம் என்று நீங்கள் விசுவாசித்து, அதே காரியத்தின் பேரில் நடந்து கொள்வீர்களானால், அது உங்களை விட்டுப் போகப் போகிறது, அது மறுபடியும் ஒருபோதும் திரும்பி வராது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இங்கே இருக்கையில், டெக்ஸூஸிலேயே சந்தோஷமான நபராக இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன், நீங்கள் இந்தியானாவுக்கு வரும்போது, அங்கே அடுத்த சந்தோஷமான நபராக இருங்கள், ஏனென்றால் நான் அங்கே திரும்பிப் போகிறேன், நான் உங்களுடன் இருப்பேன், எனவே நாம் இருவரும் ஒருமிக்க சந்தோஷமாயிருப்போம். ஆமாம், பெருமாட்டியே. 4848.இப்பொழுது, அந்த அதே காரியத்தின் கீழாக... மேயோ சகோதரர்கள் என்னிடம் நான் சுகமடைய உலகப்பிரகாரமாக ஒரு வாய்ப்புமேயில்லை என்று ஒரு முறை கூறினார்கள். என்னுடைய நிலையைப் பாருங்கள்... ஓ, என்னே! 'ஆச்சரியமான கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமை,' ஆமாம். இப்பொழுது, இப்பொழுதே போன்று அப்படியே பேசிக் கொண்டிருக்கிறேன், அது குறைய ஆரம்பிக்கிறது, இல்லையா? ஆமாம், பாருங்கள், ஆமாம், பெருமாட்டியே, அது சரியாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்... நீங்கள் சரியாக... நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அங்கே கொஞ்ச நேரம் நின்று கொள்ளுங்கள், நீங்கள் எப்படியும் குணமடைந்து விடுவீர்கள். பாருங்கள்? சுகமளித்தலைச் செய்வது உங்கள் விசுவாசம் தான். அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நீங்கள் சந்தோஷமாயிருக்க விரும்புகிறீர்கள், புறப்பட்டு சென்று பாடிக் கொண்டிருங்கள். என்னே, நாளைய தினமும், அவர்களால் கூடியமட்டும் அப்படியே-அப்படியே சந்தோஷமாயிருங்கள். இப்பொழுது, நீங்கள் வித்தியாசத்தை உணரப் போகிறீர்கள், சரியாக இங்கேயே அதை அறிந்து கொள்வீர்கள். இங்கே இந்த வரத்தின் பிரசன்னத்தில் உங்களால் அதை உணர முடியுமானால், அங்கே வெளியிலும் கூட உங்களால் அதைக் கொண்டிருக்க முடியும், ஏனென்றால் அவர் தான் அளிப்பவர் (Giver). அது சரியல்லவா? ஆமென். 4949.இப்பொழுது, மக்களே, நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இந்த சீமாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தேன், ஏனென்றால் அவள் அங்கே பக்கத்து வீட்டுக்காரியாகவும், மற்றவையாகவும் இருக்கிறாள். சம்பவித்துள்ள ஏதோவொன்றை நான் அவளிடம் (கூறும்படியாக) கர்த்தர் என்னிடம் காட்ட வேண்டும் என்று நான் சற்று முன்பு என்னுடைய இருதயத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள்... பெற்றுக் கொண்ட போது நான் அவளைக் கண்டேன். அந்த சகோதரன் அவளுடைய கையில் ஒரு ஜெப அட்டையைக் கொடுத்த போது, அவள் அப்படியே, 'ஓ, என்னே,' அவள் அந்த விதமாகச் செய்தாள், நான் அப்போது அதை அறிந்து கொண்டேன், நான் அவளிடம் அதைத்தான் கூறினேன். அவள் சற்று முன்பு அங்கே அந்த அறையில் நின்று கொண்டு, பக்கவாட்டில் நோக்கிப் பார்த்த போது, மிகவும் சோர்வுற்ற ஒரு உணர்ச்சி அவள் மேல் வந்தது. அவள் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டாள், ஏனென்றால் அந்த வெளிச்சமானது இருளடைந்திருந்ததாக அவளுக்குக் காணப்பட்டது. அதைத் தான் நான் அவளிடம் கூறினேன். அது உண்மை தானா, சகோதரியே? (அந்த சகோதரி, 'அது சரிதான்' என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) பாருங்கள், அது இப்பொழுது இங்கே ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அங்கே வீட்டைச் சுற்றிலும் செய்யப்பட்ட சில காரியங்களின் மூலமாக அவளுடைய விசுவாசத்தை கட்டி எழுப்புகிறது. ஏன், அவர்கள், 'நல்லது, யாராவது அவரிடம் அதைக் கூறியிருப்பார்கள்' என்று நினைக்கலாம். நீங்கள் பாருங்கள்? ஆனால் அவ்வண்ணமாக அவர்கள் சரியாக இங்கேயே அறிந்து கொள்வார்கள். உங்களுக்கு புரிகிறது, இல்லையா, நண்பர்களே? இப்பொழுது, கர்த்தர் அற்புதமானவர் இல்லையா? 5050.இப்பொழுது, நண்பர்களே, அதற்கு-அதற்கு உணர்ச்சிவசப்படுதல் அவசியமில்லை; உண்மையான உறுதியான விசுவாசம் தான் அதற்குத் தேவை. தேவன் உணர்ச்சிவசப்படுதலின் கீழாகவோ, அல்லது சத்தமிடுவதின் கீழாகவோ, அல்லது-அல்லது கோபத்தோடே தரையில் மிதித்து நடப்பதின் கீழோ, அல்லது ஓடுவதின் கீழோ கிரியை செய்வதில்லை. பிசாசை விரட்டுவதற்கு நீங்கள் அவன் மேல் கோபத்தோடு தரையில் மிதிப்பதால் (அவனை விரட்ட) முடியாது. நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து, அவன் வெளியேறும்படி அவனைப் பார்த்து கட்டளை கொடுக்க வேண்டும். அது சரியல்லவா? அந்த தேவனுடைய வல்லமை (பாருங்கள்?), அதுதான் அதுவாக இருக்கிறது. 5151.பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்களைத் தாங்களே கீறிக் கொண்டும், பலிபீடங்களின் மேல் துள்ளிக் குதித்துக் கொண்டும், 'ஓ பாகாலே, ஓ பாகாலே' என்று சத்தமிட்டனர். எலியாவோ, 'ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களின் தேவனாகிய கர்ததாவே, நான் உம்முடைய ஊழியக்காரன் என்று இந்த நாளில் அறியப்படட்டும்' என்றான். அப்போது அக்கினி விழத்துவங்கியது. அது சரியல்லவா? அது அறிந்திருப்பதின் அதிகாரமாய் உள்ளது, யூகித்துக் கொண்டிருப்பதல்ல, ஆனால் அறிந்திருப்பது. இப்பொழுது, நீங்கள் பயபக்தியோடு கவனிப்பீர்களானால், அது உங்களுக்கு மிகவும் அதிகமாக காணப்படாமல் இருக்கலாம். ஆனால் நண்பனே, சுகத்தைப் பெற்றுக் கொள்கிற இந்த ஜனங்களுக்கு, அது அவர்களுக்கு அற்புதமாய் உள்ளது. அது சரியே. இப்பொழுது, நான் ஜெபிக்கையில், அப்படியே பயபக்தியோடு இருங்கள். இந்தச் சிறு பெண்மணி இந்த சுகமளித்தலுக்காக ஆயிரக்கணக்கான மைல்கள் வழி எல்லாம் பிரயாணம் செய்து இங்கே வந்திருக்கிறாள். 5252.இப்பொழுது, சகோதரி ராபர்ஸன் அவர்களே, பயபக்தியோடிருங்கள். ராபர்ஸன் அவர்களே, அது சரிதானா? இப்பொழுது, சரியாக இப்பொழுதே, உங்கள் எல்லா கோளாறுகளிலிருந்தும் விடுதலையடையப் போகிறீர்கள், சரியாக இப்பொழுதே. நாளைக்கு, நீங்கள் அற்புதமாக உணரப் போகிறீர்கள். இன்றிரவு, உங்களுக்கு ஒரு புதிய நேரமாக இருக்கப் போகிறது. நீங்கள் வீட்டிற்குப் போகும் போது, நீங்கள் முழுவதும் புன்முறுவலோடும், சிரித்துக் கொண்டும் இருக்கப் போகிறீர்கள். நான் அதை முன்னரே காண்கிறேன். நீங்கள் நன்றாக உணரப் போகிறீர்கள். அப்படியானால் அது... நீங்கள் அந்தவிதமாக தரித்திருக்கவே விரும்புகிறேன் மீதி காரியங்கள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... ... சாத்தான் எப்போதுமே சோதிக்க முயற்சிக்கிறான், ஆனால் இங்கேயிருக்கும் நீர் அவன் மேல் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறீர். இன்றிரவு அது இங்கே நின்று கொண்டிருக்கிறது என்றும், கர்த்தருடைய ஆவியானவர் இங்கே நின்று கொண்டு ஏற்கனவே அந்தப் பெண்மணியின் மேல் அசைவாடத் துவங்கி விட்டார் என்றும் எனக்குத் தெரியும், ஏனென்றால் அவளிடம் விசுவாசம் இருக்கிறது. ஆனால் நான் உம்மிடம் வேண்டிக் கொள்வதை அவள் கேட்க வேண்டும் என்று விரும்பினாள், அப்படியானால் இனி அவள் விசுவாசத்தைக் கொண்டிருப்பாள். அவள் சுகமடையும் அளவுக்கு, அவள் ஏற்கனவே சுகமடைந்து விட்டாள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதைக் கேட்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்... பிதாவே, நான் உம்மிடம் வேண்டிக் கொள்வதை கேட்க விரும்புகிறாள், அண்டைவீட்டாளாகிய ஒரு பெண்மணியின் அந்த விசுவாசத்திற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனே, அவள் தொடர்ந்து எப்போதுமே சுகமடைந்தவளாய் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சத்துருவின் வல்லமை இனிமேல் ஒருபோதும் அவளைத் தொல்லைப்படுத்தாதிருப்பதாக. அவள் சந்தோஷமாய் இருப்பாளாக, அவளும் அவளுடைய கணவனும் மகிழ்ச்சியோடே இருப்பார்களாக. அவர்கள் உமக்கு தங்கள் ஜீவியம் முழுவதும் சேவை செய்து, சந்தோஷமான நீடிய வாழ்வை ஜீவிப்பார்களாக. இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது, தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சாத்தான் இந்தப் பெண்மணியை விட்டு விலக வேண்டும் என்று நான் அவனைக் கடிந்து கொள்கிறேன். ஆமென். 5353.சகோதரி ராபர்ஸன் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபையோரே, நீங்கள் உங்கள் தலையை உயர்த்தலாம். இப்பொழுது நீங்கள் வித்தியாசமாக உணருகிறீர்களா? நன்றாக உணருகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அந்தவிதமாகத்தான் தொடர்ந்து தொடர்ந்து உணரப் போகிறீர்கள். இப்பொழுது, இங்கே உங்களால் அந்தவிதமாக உணரக் கூடுமானால், அங்கே வெளியிலும் அந்தவிதமாக உணருவீர்கள், அங்கே பின்னால் ஜெபர்ஸன்வில்லிலும் உங்களால் அந்தவிதமாக உணர முடியும். ஆமென். ஆமென். நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். சகோதரி ராபர்ஸன் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். நாம் தேவனுக்கு இவ்விதமாக ஸ்தோத்திரம் செலுத்துவோம் (சகோதரன் பிரன்ஹாமும் சபையோரும் துதிக்கிறார்கள் - ஆசிரியர்.) 'ஆமென்' என்று கூறுவோம். (சபையோர், 'ஆமென்' என்கின்றனர்.) ஆமென். சரி. இங்கே கொண்டு வாருங்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) வணக்கம், சகோதரியே? நிச்சயமாகவே துவக்க முதலே உங்களுடைய காலில் ஏதோ கோளாறு உள்ளதை என்னால் காண முடிந்தது, நீங்கள்... அது உங்களுடைய கால்களில் இருக்கிறது. அங்கே தான் உங்கள் கால்களில் தான் கோளாறு இருக்கிறது. 54.(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இப்பொழுது, அந்த ஜனங்களை எனக்குத் தெரியாது. இதோ ஒரு சீமாட்டி இங்கே நின்று கொண்டிருக்கிறாள், எனக்கு அந்த சீமாட்டியைத் தெரியாது. ஆனால், அவளுக்கு என்ன கோளாறு உள்ளது என்றும் எனக்குத் தெரியவில்லை, ஆனால் சற்று நேரத்தில் தேவன் அனுமதிப்பார் என்பதை நான்-நான் அறிவேன். இப்பொழுது, சற்று நேரம் இந்தவிதமாக உங்களுடைய சிதறாத கவனத்தை எனக்குக் கொடுப்பீர்களா, ஏன், நம்மால் கூடியமட்டும் சிறந்த முறையில் ஒவ்வொருவரையும் கொண்டு வர முயற்சிப்போம். வணக்கம், சகோதரியே? சரி, உடனடியாக உனது கரத்தை நாங்கள் கொண்டிருக்கட்டும். இயேசுவை உன்னுடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறாயா? நல்லது, ஆமாம், பெருமாட்டியே, உங்களுக்கு அநேக காரியங்கள் உள்ளன, ஆமாம், அவைகள் உங்களுக்கு இருப்பதை நான் காண்கிறேன். உங்களுக்கு அநேக காரியங்கள் தவறாய் உள்ளன. ஆனால் நீங்கள் ஜெபிக்க வந்துள்ள காரியங்களில் ஒன்று, மிகத் தீவிரமாக இருப்பது, ஸ்திரீகளுக்குள்ள கோளாறு தான், அதுதான் உங்களை நீண்ட காலமாக தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் சரியாகக் கூறுகிறேனா? அது ஏறக்குறைய புற்றுநோயாக உள்ளது...?... மிக மோசமாக உள்ளது. அவர்கள் உங்களிடம் அதைக் கூறவில்லையா? அது கேடுவிளைவிக்கிறதாய் உள்ளது, அவர்களும் அவ்வண்ணமாகவே எண்ணுகிறார்கள், அது-அது மிகவும் மோசமாக உள்ளது. இப்பொழுது, நீங்கள்... அது... அது உண்மை, இல்லையா? இப்பொழுது, அதைக் கூறுவது நானல்ல. பெருமாட்டியே? (அந்த சகோதரி சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார்கள் - ஆசிரியர்.) உம்-உம். முக்கியமாக இடது பக்கத்தில் வேதனை இருக்கிறது, அதிக வலி எடுக்கிறது...?... அது உண்மை, சகோதரியே. இப்பொழுது, தேவனுடைய ஆவியினாலே என்னால் இந்தக் காரியங்களை உங்களிடம் கூற முடியுமானால், நான் தேவனிடம் வேண்டிக் கொண்டால், அவரால் கூடுமா, தேவன் அதை உங்களை விட்டு எடுத்துப்போடுவாரா, நீங்கள்...?... அவருக்கு துதியை செலுத்துவீர்களா? நீங்கள் அவருக்கு துதியை செலுத்துவீர்கள். சரி, அவர் அதைச் செய்வார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நீங்கள் சுகமடைந்து விடுவீர்கள் என்று என்னுடைய முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரி, 'நான் நியூஆல்பனியிலிருந்து வருகிறேன்' என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) அது சரியா? நியூ ஆல்பனியிலிருந்தா? நல்லது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. ஓ, என்னே, அப்படியானால் நீங்கள் சுகம் பெறுவதற்கான நேரம் இதுவே, சகோதரியே. இது உங்களை விட்டுப் போகும் வேளை இதுதான். எனக்குத் தெரியாது. உங்களால் அதை அந்நேரத்தில் ஒலிப்பெருக்கியில் கேட்க முடிந்ததா? (சபையார், 'இல்லை' என்கின்றனர் - ஆசிரியர்.) 55.இந்தச் சிறு காரியமானது... அது சிறிது அதிகரிக்கக் கூடுமானால். இந்த சீமாட்டி என்னுடைய... லிருந்து வந்திருக்கிறாள். இந்தியானாவிலுள்ள, நியூஆல்பெனியில் எனக்குக் கீழே 4 மைல்கள் தூரம்; நான் அறிந்துள்ளபடி, அவர்களை என்னுடைய ஜீவியத்தில் கண்டதேயில்லை.அவர்கள்-அவர்கள் என்னுடைய அநேக கூட்டங்களில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஜெப வரிசைக்குள் வர முயற்சித்து, முழுவதுமாக ஃபிலின்ட், மிச்சிகன், மற்றும் எல்லாவிடங்களுக்கும் வந்தார்கள், கடைசியில் இன்றிரவு தான் ஜெப வரிசையில் அவர்களை வரும்படி செய்தது. அவர்களுடைய வயது கொண்ட ஒரு ஸ்திரீக்கான சில சிறிய வியாதிகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள், அது தான் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் முக்கிய காரியம் என்னவென்றால், எனக்கு நிச்சயமில்லை, ஆனால் கருப்பையின் இடது பக்கத்தில் ஒரு கட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன், அது கொடிதாக வருகிறது, அது இடது கருப்பையில் உள்ளது. அங்கு தான் அவர்களுக்கு வலி இருக்கிறது, அது எந்த பக்கத்தில் இருக்கிறது என்று அவளிடம் கூறினேன், எது அவர்களை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது என்றும், அது எங்கே இருந்தது என்றும் அவர்களிடம் கூறினேன். அது கேடு விளைவிக்கிற கொடிதானதாக இருக்கிறதா என்பதில் எனக்கு அதிக நிச்சயமில்லை, ஏனென்றால் அது எப்படியும் வழக்கமாக ஒரு புற்று நோயைப் போன்று தான் அடிக்கிறது. அந்தக் காரியங்கள் உண்மையாக உள்ளன, அவைகள் உண்மை தானா, சகோதரியே? உங்கள் பெயரென்ன? (அந்த சகோதரி, 'ஹிக்கின்பாதம்' என்கிறார்கள் - ஆசிரியர்.) ஹிக்கின்பாதம், ஹிக்கின்பாதம். சரி. தேவன் நம்முடைய சகோதரியை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, எல்லாவிடங்களிலும் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். 56.எங்கள் பரலோகப் பிதாவே, வீட்டிற்கு கீழே ஒரு சில மைல்கள் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்; ஓ தேவனே, அவர்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் வருகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதோ டல்லாஸ், டெக்ஸூஸிலிருந்து நேராக இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நீண்ட கால கூட்டமானது அறிவிக்கப்பட்டதை அறிந்து நிச்சயமாக உள்ளே வர ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று வந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, இந்த வியாதிகளால் ஏற்படும் தொல்லையிலிருந்து சுகமாகும்படியாகத்தான் இன்றிரவு வந்திருக்கிறார்கள். ஓ பிதாவே, நீர் அவளுக்கு பரிபூரண விடுதலையை கொடுக்கும்படியாக, அவளிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அவள் இந்தியானாவிலுள்ள நியூஆல்பெனிக்குத் திரும்பிச் செல்கையில், தேவனுடைய வல்லமையானது அவளோடு போவதாக; அவள் தன்னுடைய சபைக்கு, எங்கே போனாலும், அவளுடைய சபையில், அவளுடைய சாட்சியின் மூலமாக பழமை நாகரீகமான ஒரு எழுப்புதலை தொடங்குவீராக. அங்கே தேவனுடைய மகிமையான வல்லமை இருப்பதாக. அவள் ஏறக்குறைய எல்லாவிடங்களுக்கும் சென்று சாட்சி கூறி, உம்முடைய நன்மைகளைக் கூறி, மற்றவர்களை உம்மிடம் கொண்டு வருவாளாக. இப்பொழுது, காலத்திற்கு முன்பே அவளைக் கல்லறைக்கு அனுப்ப சாத்தான் தீர்மானித்திருக்கிறான். இப்பொழுது, அவளுடைய சரீரத்தின் உறுப்புகளைச் சுற்றி மூடிக் கொண்டிருக்கிற இந்தப் பிசாசின் வல்லமை அவளுடைய ஜீவனை எடுக்க முயற்சிக்கிறது, அவளோ வந்திருக்கிறாள்; அவள் எல்லாவிடங்களுக்கும் சென்றாள், இப்பொழுது, இறுதியாக இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். எங்களுடைய சகோதரிக்கு தீங்கு விளைவித்த பிசாசே, உனக்கு விரோதமாக இந்த விசுவாசத்தின் சவாலோடு நான் வருகிறேன்: அவள் ஜீவிக்க வேண்டும் என்று மரித்த தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், இந்தப் பெண்மணியை விட்டு வெளியே வா! எங்களுடைய சகோதரியின் ஜீவனை எடுக்கிற பிசாசின் ஆவியே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா! இப்பொழுது சற்று நேரம் ஒவ்வொருவரும் உங்களுடைய தலையைத் தாழ்த்துங்கள். ஒவ்வொருவரும். 57.உன்னுடைய சாட்சிக்காக நீ செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறதை உன்னிடம் கூறுகிறேன். என்ன சொல்கிறாய்? ஆமாம். சரி. நானும் கூட அதை அறிந்திருக்கிறேன். நீ செய்ய வேண்டுமென்று நான் விரும்புவதை உன்னிடம் கூறுகிறேன். நீ வீட்டிற்குத் திரும்பிப் போகும் போது, 1012 கிளார்க் தெரு: ஜார்ஜ் டீஆர்க் அவர்களை நீ அழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரை உனக்குத் தெரியுமா? வருடக்கணக்காக இன்சுலினை எடுத்துக் கொண்டிருந்தார். உனக்கு அது ஞாபகம் உள்ளதா? நான் அவரோடு ஜெபிக்கும்படி கீழே போனேன். உனக்கு அது ஞாபகம் உள்ளதா? அவர் தன்னுடைய எண்பது வயதுகளில் இருந்த ஒரு மனிதனாக இருந்தார், அது முதற்கொண்டு அவர் ஒருபோதும் இன்சுலினை எடுத்ததேயில்லை; பரிபூரண சுகமடைந்தார். அது சரிதானா? நீயும் அவ்வாறே சுகமடைவாய், சகோதரியே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஒவ்வொருவரும் உங்கள் தலையை உயர்த்தலாம். எல்லாமே, நீ சுகமடைந்து விட்டாய்...?... நாம் ஒவ்வொருவரும், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். (சபையார், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுகிறார்கள் -ஆசிரியர்.) அவள் நியூஆல்பெனியிலிருந்து வருகிறாள். ஒரு நண்பர் அங்கேயிருக்கிறார், அவள் அவரை அறிந்திருக்க நேரிட்டது, அவர் தான் எண்பது வயதுள்ள திரு. டீஆர்க் அவர்கள். அவர் எவ்வளவு இன்சுலினை எடுக்க வேண்டியிருந்தது என்பதை மறந்து விட்டேன், அவர் அதை வருடக்கணக்காக எடுத்து வந்தார். அவரை சந்திக்கவும், அவரைக் காணவும் நான் சென்றேன், அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் வெறுமனே கர்த்தரிடம் வேண்டிக் கொள்வீரென்றால், அவர் அதைச் செய்வார்' என்று கூறினார். நான் கர்த்தரிடம் வேண்டிக் கொண்டேன், அவர் திரும்பிச் சென்றார், அவருடைய மருத்துவர், 'உமக்கு வியாதியில்லை (negative), அதைக் குறித்ததான ஒரு துளி கூட எங்குமேயில்லை' என்று கூறினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு... அது முதற்கொண்டு அவர் அந்த வியாதி இல்லாதவராய் இருந்து வருகிறார். கர்த்தர், அவர் தேவனாய் இருக்கிறார், இல்லையா? ஆமென்.